ஜியோ ரீசார்ஜ் கட்டணங்களில் அதிரடி மாற்றம் - அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்...!
ஜியோ நிறுவனம் தனது ரிசார்ஜ் கட்டணங்களில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த விலை மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ வழங்கும் ரூ.999 போஸ்ட்பெயிட் திட்டத்தில் தினசரி டேட்டா பயன்படுத்த எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படாமல் இருந்து வந்தது.
இரண்டு மாத வேலிடிட்டி கொண்டுள்ள இந்த திட்டத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், இலவச ரோமிங் மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜியோ கட்டண மாற்றங்களில் புதிய சில சேவைகளும் பழைய கட்டண முறைகளும் அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணங்கள் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்னர் ஜியோ பயனர்களுக்கு இரண்டு சலுகை திட்டங்கள் வழங்கப்பட்டு வந்தது. அதாவது, ரூ.309 திட்டத்தில் மாதம் 60 ஜிபி டேட்டாவும், ரூ.509 திட்டத்தில் 120 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட்டது.
தற்போது புதிய திட்டங்களின் படி தினமும் 1 ஜிபி வீதம் ரூ.309 ரீசார்ஜ் செய்யும் போது மாதம் 30 ஜிபி டேட்டாவும், ரூ.409 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 60 ஜிபி டேட்டா, தினசரி 2 ஜிபி டேட்டாவும், ரூ.799 திட்டத்தில் வாடிக்கயாளர்களுக்கு 90 ஜிபி டேட்டா தினமும் 3 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
இத்துடன் ரூ.999 திட்டத்தில் தினசரி எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி மாதம் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.