பேஸ்புக் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஆப்பு ரெடி...! நீங்க மூச்சு விட்டாக்கூட ரெகார்ட் ஆகுமுங்கோ...!

இன்றைக்கு யார் தான் பேஸ்புக் பயன்படுத்தவில்லை....சரி அது தெரிந்தது தான்...அதே பேஸ்புக்ல இப்ப என்ன மாற்றம் வர உள்ளது என தெரியுமா..?

அதற்கும் முன்னாடி நீங்க ஒன்று தெரிஞ்சிகோங்க..சமீபத்தில் தனி நபர் விவரங்களை திருடி பேஸ்புக் நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுவிட்ட சம்பவம் எல்லோரும் அறிந்ததே...

அதற்காக பேஸ்புக் நிறுவனம் கூட, மன்னிப்பு கேட்டது..அதையும் தாண்டி..தற்போது வேறு விதத்தில் மற்றொரு பிரச்சனை வர உள்ளது

தற்போது பேஸ்புக் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றிற்காக காப்புரிமை கேட்டு உள்ளது.

இந்த தொழிநுட்பம் எதற்காக பயன்படும் தெரியுமா..?

நம்முடைய மொபைல் போனை பயன்படுத்தி அதில் பதிவாகும் ஆடியோக்களை பேஸ்புக்கிற்கு அனுப்பும். நாம் பேசுவது....மற்றவர்களுடன் உரையாடுவது ..படுக்கை அரை முதல் எந்த அறையில் இருந்தாலும்,பேஸ்புக் பயன்படுத்தும் போது, அது அருகில் உள்ள  சாதனங்களை பயன்படுத்தி எளிதில் இவை அனைத்தும் ரெக்கார்ட் செய்து விடும்...

ஜூன் 14 ஆம் தேதியன்று பேஸ்புக் விண்ணப்பித்த விண்ணப்பம் குறித்து மெட்ரோ பதிவிட்டு உள்ளது

அதில் எப்படி  நம் போனில் உள்ள மைக்கை தானாக ஆன் செய்யப்பட்டு பதிவிடப் படுகிறது என்ற விவரத்தை அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த விவரத்தை பார்த்த உடன், மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்

அதன்படி ஃபேஸ்புக் அதிக பிட்ச் கொண்ட ஆடியோ சிக்னல்களை பிராட்கேஸ்ட் தரவுகளில் எம்பெட் செய்யும், இந்த ஒலி மனிதர்களுக்கு கேட்காதாம்.

இந்த சிக்னல் உங்களின் மொபைலில் ஆடியோவை பதிவிட்டு, அவற்றை பேஸ்புக்கிற்கு அனுப்பும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பேஸ்புக் நிறுவனம் பொது ஆலோசகர் ஆலென் லொ, "ஒரு சில புதிய தொழிநுட்பம் வரும் போது அதற்கான காப்புரைமையை பெற முன்கூட்டியே விண்ணப்பிப்பது வழக்கம் தான் என்றும், இது வணிகமயமாக்கப்படும் ஒரு தொழில் நுட்பம்...நாங்கள் காப்புரிமை கோரவில்லை என்றால் மற்ற நிறுவனங்கள் இதற்கான காப்புரிமையை பெற்று இருக்கும் என்றும்..மேலும் இதை இதுவரை பேஸ்புக்கின் எந்த ஒரு சாதனத்திலும் மற்றும் எந்த ஒரு சேவையிலும் சேர்க்கப்படவில்லை...மற்றும் சேர்க்கப்படவும் மாட்டது என தெரிவித்து உள்ளது

மேலும், இவ்வாறு காப்புரிமை கோரியதன் மூலம், மற்ற எந்த ஒரு நிறுவனமும் உங்களுக்கு வரும் அழைப்புகள் மற்றும் ஆடியோக்களை பதிவு செய்ய விடாமல் தடுத்து இருக்கிறது என்று கூறி உள்ளார்.

அப்படி என்றால் இது போன்ற அழைப்புகள் மற்றும் ஆடியோவை பதிவு செய்யக்கூடிய இந்த காப்புரிமை பேஸ்புக் நிருவனத்திற்கு எதற்காக தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது

இதன் மூலம் மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளது பேஸ்புக் நிறுவனம்