Asianet News TamilAsianet News Tamil

கெத்துக்காட்டும் இந்தியா... DRDO-வின் நாக் ஏவுகணை பரிசோதனை வெற்றி..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு DRDO உருவாக்கிய, பீரங்கி வாகனங்களை தாக்க வல்ல  நாக்  ஏவுகணையின் இறுதி பரிசோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது.
 

Engraving India ... DRDO's Knock Missile Test Success
Author
Rajasthan, First Published Oct 22, 2020, 12:04 PM IST

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு DRDO உருவாக்கிய, பீரங்கி வாகனங்களை தாக்க வல்ல  நாக்  ஏவுகணையின் இறுதி பரிசோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது.

ராஜஸ்தானில் உள்ள போக்ரானில் காலை 6:45 மணிக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. "DRDO உருவாக்கிய நாக் ஏவுகணையின் இறுதி சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த சோதனை காலை 6:45 மணிக்கு ராஜஸ்தானில் உள்ள போக்ரானில் மேற்கொள்ளப்பட்டது," என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் கூறினார்

.Engraving India ... DRDO's Knock Missile Test Success

எதிரி டாங்குகள் மற்றும் பிற கவச வாகனங்களை அழிக்கும் வல்லமை பெற்ற ஏவுகணை அமைப்பு இப்போது இந்திய இராணுவத்தில் இணைய தயாராக உள்ளது. நாக் ஏவுகணை கேரியரில்  இருந்து சுடப்படும் நாக் ஏவுகணை அமைப்பு, இலக்குகளை 4 முதல் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தக்க முடியும். இதில் இலக்கை துல்லியமாக தாக்கும் நவீன தொழில் நுட்பத்தை கொண்டது. 

இந்த ஏவுகணை மூன்றாம் தலைமுறை பீரங்கி வாகன எதிர்ப்பு ஏவுகணை ஆகும், இது பகல் மற்றும் இரவு என அனைத்து நேரங்களிலும், எதிரியின் டாங்குகள் மீது சிறந்த வகையில் தாக்குதல் நடத்த முடியும். 2.5 கி.மீ.க்கு மேல் சென்று தாக்கும் மூன்றாம் தலைமுறை ATGM-கள் அதாவது பீரங்கி வாகனங்களை தாக்கும் ஏவுகணைகல் ராணுவத்திற்கு தேவை. இந்த தேவையை இந்த நாக் ஏவுகணை பூர்த்தி செய்கிறதுEngraving India ... DRDO's Knock Missile Test Success

இந்தியாவை  தற்சார்ப்பு ஆக்க வேண்டும் என அழைப்பு விடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த DRDO மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டியுள்ளனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நாக் மேவுகணை, நிலத்திலிருந்தும், வான் பரப்பிலிருந்தும் ஏவலாம் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். 4-7 கி.மீ தூரம் சென்று தாக்க வல்ல இந்த நாக் ஏவுகணையில், உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்திருக்கும் தொழில்நுட்பமான இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பம் அடிப்படையிலான திறன்களை கொண்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios