தூய்மை பணியாளர்களையும் விரட்டியடித்த எலான் மஸ்க்! கடும் நாற்றத்தில் டுவிட்டர் அலுவலகம்!
டுவிட்டர் அலுவலகங்களில் தூய்மை பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் டுவிட்டர் அலுவலகங்கள் கடும் நாற்றத்தில் சிக்கி தவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதும் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். ஒருவர் செய்யக்கூடிய வேலையை, ஒன்பது பேர் சேர்ந்து செய்வதாக எலான் மஸ்க் கருதினார். இதனால், டுவிட்டரில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். அவர்களல் பாதிபேர் எலான் மஸ்க்கின் கிடுக்குபிடியான நடவடிக்கையால் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்தனர்.
டுவிட்டரில் விரைவில் ஸ்வைப் செய்யும் அம்சம்! எலான் மஸ்கின் அடுத்த அப்டேட்!
இந்த நிலையில், டுவிட்டர் அலுவலகங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போர்க்கொடி தூக்கியதாக கூறப்படுகிறது. இது டுவிட்டரின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் செல்லவே, தூய்மை பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், தற்போது டுவிட்டர் அலுவலகங்களில் போட்டது போட்டபடி அப்படியே கிடக்கின்றன.
Google Voice அம்சத்தில் புதிய அப்டேட்! இனி ஸ்பேம் கால்களை எளிதில் கண்டறியலாம்!
உணவருந்தி விட்டு போடப்பட்ட பழைய உணவுப் பொட்டலங்கள் அப்படியே கிடப்பதால் அலுவலகம் முழுவதும் வாடை அடிக்க ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக கழிப்பறைகள் சுத்தமின்றி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், டுவிட்டரில் பணியாற்றும் ஊழியர்களே டாய்லெட்டுக்கு செல்லும் போது பேப்பர், சானிடைஸர்களை எடுத்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றியதில் இருந்தே அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
WhatsApp Update: இனி பல சேட்களை ஒரே கிளிக்கில் செலக்ட் செய்யலாம்!
இதனிடையே எலான் மஸ்க் நான் சிஇஓ பதவியில் இருக்கட்டுமா, வேண்டாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினார். அதில் பெரும்பாலான ட்விட்டர் பயனர்கள் அவரைப் பதவி விலகிக்கொள்ளவே விரும்பினர். கருத்துக்கணிப்பின்படி, 57.5 சதவீத ட்விட்டர் பயனர்கள் மஸ்க் பதவி விலகும்படி வாக்களித்துள்ளனர், அதே நேரத்தில் 42.5 சதவீதம் பேர் அவர் தலைவராக தொடரலாம் என்று கூறியிருந்தனர். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், சிஇஓ பொறுப்பை ஏற்கும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்தால் மட்டுமே பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
இந்த 2022 ஆண்டோடு முடிந்து போன 5 முக்கிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள்!