Google Voice அம்சத்தில் புதிய அப்டேட்! இனி ஸ்பேம் கால்களை எளிதில் கண்டறியலாம்!
ஸ்பேம் கால்களை எச்சரிக்கும் வகையில் கூகுள் வாய்ஸில் புதிய அம்சம் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Google Voice என்பது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள Google Workspace பயனர்களுக்கு கிடைக்கும் சேவையாகும். பயனர்கள் அழைப்பதற்கும், மெசேஜ் அனுப்புவதற்கும், வாய்ஸ் மெசேஜ் செய்வதற்கும் ஒரு போன் நம்பரை பெறுவார்கள். இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளிலும் வேலை செய்யும். இந்த நிலையில், கூகுள் வொர்க் ஸ்பேஸ் தளத்தில் தற்போது புதிதாக அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து கூகுள் வொர்க் ஸ்பேஸ் தளத்தில் சில விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, “தேவையற்ற அழைப்புகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் மோசடி அழைப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாக்க, கூகுள் வாய்ஸ் ஸ்பேம் என்ற அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்பேம் கால்கள் வந்தால் 'சந்தேகத்திற்குரிய ஸ்பேம் அழைப்பு' என்ற லேபிளைக் காட்டும்.
இந்த 2022 ஆண்டோடு முடிந்து போன 5 முக்கிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள்!
ஒவ்வொரு மாதமும் பில்லியன் கணக்கான ஸ்பேம் கால்களை அடையாளம் காணக்கூடிய மேம்பட்ட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கூகுள் இந்த ஸ்பேம் கால்களை கண்டுபிடித்து எச்சரிக்கை வழங்குகிறது," இவ்வாறு கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
கூகுள் ஸ்பேம் கால் அலர்ட் செயல்படும் விதம்:
ஸ்பேம் கால்கள் என்ற அறிவிப்பானது இன்கம்மிங் கால்களிலும், கால் ஹிஸ்டரியிலும் தோன்றும் என்று கூகுள் கூறுகிறது. பயனர்களுக்கு இங்கே இரண்டு விதமான ஆப்ஷன்கள் இருக்கும். ஒன்று, சந்தேகத்திற்குரிய ஸ்பேம் அழைப்பை அவர்களால் உறுதிப்படுத்த முடியும், இதனால் அந்த எண்ணிலிருந்து எதிர்காலத்தில் அழைப்புகள் வந்தால் அவை நேரடியாக வாய்ஸ் மெயில் என்ற பகுதிக்கு திருப்பி விடப்படும். மேலும், கால் ஹிஸ்டரி மெனுவில் காட்டப்படும். இரண்டாவது ஆப்ஷன், ஸ்பேம் அல்ல என்பதாகும். இதை கிளிக் செய்தால், அந்த எண்ணுக்கு ஸ்பேம் என்ற எச்சரிக்கை மீண்டும் காட்டப்படாது.
WhatsApp Update: இனி பல சேட்களை ஒரே கிளிக்கில் செலக்ட் செய்யலாம்!
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த அம்சம் படிப்படியாக பயன்பாட்டுக்கு வரும். இது ஏற்கனவே டிசம்பர் 29 முதல் வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்த அம்சம் அனைத்து Google Voice வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். மேலும், வாய்ஸ் கால் ஸ்பேம் ஃபில்டர் ஆஃப் செய்யப்பட்டிருந்தால், சந்தேகத்திற்குரிய ஸ்பேம் லேபிளிங் தானாகவே திரையில் தோன்றும்.
200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் எலான் மஸ்க்?