கொரோனா ஊசி போட்ட பின் என்ன ஆச்சு... பீதியான தருணம் பற்றி எலான் மஸ்க் ஓபன் டாக்!
"சிகிச்சை நோயைவிட மோசமாக இருக்க முடியாது. தடுப்பூசியின் செயல்திறன் குறித்த பொது விவாதம் நின்றுவிடக்கூடாது” என எலான் மஸ்க் வலியுறுத்துகிறார்.
ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அவர் தான் அனுபவித்த வேதனையைப் பற்றிக் கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தடுப்பூசிகள் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தபோது, வால் ஸ்ட்ரீட் சில்வர் ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ பதிவு ஒன்றைப் எலான் மஸ்க் செவ்வாய்கிழமை ரீட்விட் செய்துள்ளார்.
“மக்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பல பூஸ்டர் டோஸ்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மூர்க்கத்தனமாக வலியுறுத்தப்பட்டது எனக்குக் கவலையாக இருந்தது. அதனால் குழப்பம் அடைந்தேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
7 நாட்கள் தாங்கும் பேட்டரி.. வாட்டர் ப்ரூஃப்.. இந்த விலைக்கு இப்படியொரு ஸ்மார்ட்வாட்ச் இருக்கா..
ஊழியர்களுக்கு தடுப்பூசி டோஸ்களை வழங்க கட்டாயப்படுத்தியபோது தனியார் நிறுவனங்கள் அதற்கு இணங்குவதை விட சிறைக்குச் சென்றிருப்பதே சிறந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
"தடுப்பூசி வெளியாவதற்கு முன்பே எனக்கு அசலான கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. லேசான அறிகுறிகள் இருந்தன. அப்போது நான் மூன்று தடுப்பூசி டோஸ்களை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. மூன்றாவது டோஸ் எடுத்துக்கொண்டபோது கிட்டத்தட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு என் நிலை மோசமானது" என்றும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார்.
"நான் தடுப்பூசிகளை நம்பவில்லை என்று தோன்றலாம். நான் நம்புகிறேன். இருப்பினும், சிகிச்சையானது நோயைவிட மோசமாக இருக்க முடியாது. தடுப்பூசியின் செயல்திறன் குறித்த பொது விவாதம் நின்றுவிடக்கூடாது” எனவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம், இதே போன்ற கருத்துக்களைக் கூறிய எலான் மஸ்க், "நான் பொதுவாக தடுப்பூசிகளுக்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால் சிகிச்சை அல்லது தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் கொடுக்கப்பட்டால், அது நோய்களைக் காட்டிலும் மிகவும் மோசமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்தார்.
BMW iX1: புதிய மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பி.எம்.டபிள்யூ!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D