BMW iX1: புதிய மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பி.எம்.டபிள்யூ!
BMW iX1 கார் வெறும் 5.3 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100kmph வேகத்தில் செல்லும். இதன் ஆரம்ப விலை ரூ.60 லட்சம் வரை இருக்கலாம்.
பி.எம்.டபிள்யூ. (BMW) நிறுவனம் இந்தியாவில் தனது X1 காரின் மின்சாரத்தில் இயங்கும் மாடலை iX1 என்ற பெயரில் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்தக் கார் வெளிநாட்டு உற்பத்தி மையத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது.
இந்தப் புதிய கார் மின்சார கார் சந்தையில் வரவேற்பைப் பெற்றுள்ள வால்வோ எக்ஸ் சி40 ரீசார்ஜ், வால்வோ சி40 ரீசார்ஜ், ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் ஹூண்டாய் கியா ஈ.வி.6 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
iX1 காரின் முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள், கதவு சில்ஸ் மற்றும் ஹெட்லைட்களில் நீல நிறத்தில் உள்ளன. ஹெட்லைட்களில் தலைகீழ்-எல்-வடிவ இரட்டை LED DRL, அலாய் வீல்கள் மற்றும் மெல்லிய LED டெயில்லைட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
Yamaha R3, MT03: டிசம்பரில் இரண்டு புதிய பைக்குகளை அறிமுகம் செய்யும் யமஹா!
iX1 உட்புறத்தில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புகளைக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், வெப்பநிலை கட்டுப்பாடு ஆகியவற்றுடன் 10.7-இன்ச் டச் ஸ்கிரீன் இருக்கிறது.
அதன் பேட்டரி பேக்கைப் பொறுத்தவரை, iX1 காரில் டூயல் மோட்டார் செட்அப் உடன் 64.7kWh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இந்தக் கார் வெறும் 5.3 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100kmph வேகத்தில் செல்லும் திறமை கொண்டது.
இறக்குமதி செய்யப்படும் மாடலாக இருப்பதால் BMW iX1 காரின் விலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ.60 லட்சம் வரை இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெறும் ரூ.100 செலவில் 700 கிலோமீட்டர் பயணம் செல்லலாம்.. லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?