Asianet News TamilAsianet News Tamil

உலகின் எந்த மூலையிலும் மொபைல் இன்டர்நெட் சேவை! 6 சாட்டிலைட்களை ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்!

எலோன் மஸ்க்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைக்கோள் மூலம் இணைய வசதி வழங்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. 

Elon Musk's Starlink launches six satellites that will connect to mobile phones sgb
Author
First Published Jan 4, 2024, 1:57 AM IST

எலோன் மஸ்க்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைக்கோள் மூலம் இணைய வசதி வழங்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் சாட்டிலைன் மூலம் நேரடியாக மொபைல் ஃபோன் இணைப்புக்கு சாத்தியம் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.

ஆறு ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், "இது பூமியில் எங்கும் மொபைல் ஃபோன் இணைப்பை வழங்க முடியும்" என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த செயற்கைக்கோள்கள் தற்போதுள்ள செல்லுலார் நெட்வொர்க் சேவைக்கு போட்டியாக இருக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

"இது ஒரு பீமிற்கு 7Mb வரை மட்டுமே வேகத்தைக் கொடுக்கும். இருந்தாலும் செல்லுலார் நெட்வொர்க் இணைப்பு இல்லாத இடங்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால், தற்போதுள்ள செல்லுலார் நெட்வொர்க்குகளுக்கு இது போட்டியாக இருக்காது" என்று எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விர்சுவல் ரியாலிட்டி வீடியோ கேமில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 'அவதார்கள்'

Elon Musk's Starlink launches six satellites that will connect to mobile phones sgb

இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பயனை எடுத்துரைதுள்ள அவர், "இது டிஜிட்டல் பாகுபாட்டைக் குறைப்பதில் ஒரு பெரிய முன்னகர்வாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள தொலைத்தொடர்பு வசதி இல்லாத பகுதிகளுக்கு மொபைல் சேவையைக் அளிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

"LTE ஃபோன்கள் மட்டும் இருந்தால் போதும். பூமியில் வானத்துக்குக் கீழ் உள்ள எந்த இடத்திலும் 'டைரக்ட் டு செல்' தொலைத்தொடர்பு சேவை வேலை செய்யும். இதற்காக ஹார்டுவேர், ஃபார்ம்வேர் அப்டேட் செய்ய அவசியமில்லை. பிரத்யேகமான அப்ளிகேஷன் எதுவும் தேவையில்லை. இதன் மூலம் எஸ்எம்எஸ், வாய்ஸ் மற்றும் இன்டர்நெட் சேவையை தடையின்றி பயன்படுத்தலாம்" என ஸ்டார்லிங்க் இணையதளத்தில் குறிப்பிடுடப்பட்டுள்ளது.

ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள்களின் தாக்கம் மொபைல் ஃபோன் இணைப்புக்கு மட்டுமானது அல்ல. வீடு மற்றும் வணிக பயன்பாடுகளில் பிராட்பேண்ட் சேவை உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு வழிவகுக்கும் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் தயாராக உள்ளன.

ஆனந்த் மஹிந்திராவையே அசர வைத்த வீடியோ! எப்படிப்பா இப்படியெல்லாம்!!

Follow Us:
Download App:
  • android
  • ios