சமூக வலைதளமான ட்விட்டர் பெயர் மாற்றம் சரியான முடிவு அல்ல என பலரும் எலான் மஸ்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டரை அண்மையில் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை அதில் செய்து வருகிறார்.

அந்த வகையில், ட்விட்டரின் அடையாளமான நீலக் குருவி லோகோ மற்றும் பெயரை மாற்றவிருப்பதாக அவர் தெரிவித்தார். சிறந்த லோகோ கிடைக்கும்பட்சத்தில் ட்விட்டரின் லோகோ உடனடியாக மாற்றப்படும் என தெரிவித்த அவர், எக்ஸ் என்ற எழுத்துடன் இலச்சினையை மாற்றலாம் என்றும் யோசனை தெரிவித்தார். மேலும், என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்தும் அவர் ட்விட்டரில் கருத்துகளை கேட்டறிந்தார்.

அதன்படி, தற்காலிகமான எக்ஸ் லோகோ இன்று இரவு முதல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது சுயவிவரப் புகைப்படத்தை X என்று மாற்றிய அவர், ட்விட்டர் நீலக் குருவிக்கு பதில் X லோகோ மாறுவது போன்ற வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் தலைமையகத்தில் புதிய லோகோ.. எலான் மஸ்க் போட்ட ட்வீட்..

ட்விட்டரில் எலான் மஸ்க் செய்யும் மாற்றங்கள் பெரும்பாலானோரால் வரவேற்கப்பட்டாலும், ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை மாற்றும் அவரது திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இது ஒரு மோசமான யோசனை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…

“இதில் முட்டாள்தனமான விஷயம் என்னவென்றால், "ட்வீட்" அல்லது "ரீட்வீட்" போன்ற தனித்துவமான மற்றும் புகழ்பெற்ற வினைச்சொல்லை உருவாக்கவே எல்லா சமூக தளங்களும் விரும்புகின்றன. அந்த வகையான பிராண்ட் அங்கீகாரம் கிடைப்பது கடினம்.” என ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

“ட்விட்டரை "எக்ஸ்" என்று மறுபெயரிடுவது மிகவும் மோசமான யோசனையாகும், ஆனால் இந்த விஷயங்களைச் சுட்டிக்காட்டுவது இனி தேவையற்றதாக உணரும் சோகமான நிலையை நாங்கள் அடைந்து விட்டோம்.” என மற்றொரு ட்விட்டர் பயனாளி பதிவிட்டுள்ளார். அதேபோல், ட்விட்டர் பெயர் மாற்றம் தொடர்பான மீம்களையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.