ChatGPT-க்காக OpenAI நிறுவனத்திற்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கினேன் - எலான் மஸ்க்
ChatGPT தளத்தை உருவாக்கிய OpenAI நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு வரை, OpenAI பற்றியும், அதன் பல்வேறு AI கருவிகள் பற்றியும் வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். ஆனால், இப்போது ChatGPT கூகுளை மிஞ்சி பிரபலமாகி விட்டது. ChatGPT ஆனது நவம்பர் 2022 முதல் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு திறன்மிக்க AI சாட்போட்கள் வெளியுலகத்திற்கு வந்தது. ஆனால் ஓபன்ஏஐ ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக இருந்தபோது அதன் நிறுவனர்களில் எலான் மஸ்க் ஒருவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஓபன்ஏஐக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை அளித்துள்ளார் எலோன் மஸ்க். எலான் மஸ்க்கின் ஒரு ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, அதில் ஆரம்பக்காலங்களில் ஒபன் ஏஐ நிறுவனத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ. 10 கோடி) நன்கொடையாக அளித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இலாப நோக்கற்ற நிறுவனமாக இருந்த ஓபன்ஏஐ, இப்போது எப்படி லாபம்பெறும் நிறுவனமாக மாறியது என்பது குறித்து தனக்கு குழப்பம் இருப்பதாகவும், அவ்வாறு செய்வது சட்டப்பூர்வமானது என்றால், அதை ஏன் எல்லோரும் செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Poco X5 5G இந்தியாவில் அறிமுகம்! நம்பி வாங்கலாமா?
GPT-4 அறிமுகம் குறித்து எலான் மஸ்க்கின் கருத்து:
ChatGPT தளத்தின் அடுத்த வாரிசான, GPT-4 ஆனது சமீபத்தில் Open AI ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு வெளியான சாட் ஜிபிடியை விட இது அதிக சக்தி வாய்ந்தது, நுணுக்கமானது. ஜிபிடி-4 பற்றி டுவிட்டரில் ஒரு பதிவு வந்தது. அதில், "GPT-4 தளம் மிகவும் நம்பகமானது, ஆக்கப்பூர்வமானது. GPT-3 ஐ விட மிகவும் நுணுக்கமான வழிமுறைகளைக் கையாளக்கூடியது." அதற்கு எலான் மஸ்க் பதிலளிக்கையில், "மனிதர்களாகிய நமக்கு என்ன வேலை? நாம் நியூராலிங்குடன் முன்னேறுவது நல்லது" என்று கூறியுள்ளார்.
தற்போது வந்துள்ள GPT-4 என்பது ஒரு "பெரிய மல்டிமாடல் மாடல்" என்று கிரியேட்டர்கள் கூறுகின்றனர், இது பல்வேறு தொழில்முறை மற்றும் கல்விசார் முறைகளில் மனிதர்களை போலவே சிறப்பாக வேலை செய்கிறது. இதற்கு முன்பு வெளிவந்த GPT-3/ GPT 3.5 போலல்லாமல், இந்த புதிய GPT-4 ஆனது இமேஜ் வகை கோப்புகளையும், அதிலுள்ள படங்களையும் புரிந்து கொள்கிறது. குறிப்பாக அப்லோடு செய்யப்படும் படத்தில் உள்ள பொருட்களை பகுப்பாய்வு செய்யலாம், புகைப்படத்தில் உள்ள வார்த்தைகளை மொழிபெயர்க்கலாம்.
2022ல் 11,000 பேர்.. 2023ல் 10,000 பேர் - ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் மெட்டா நிறுவனம்