இனி லைக், ரீட்வீட், ரிப்ளை செய்ய கட்டணம்! ட்விட்டரை குட்டிச்சுவராக்கும் எலான் மஸ்க்!
புதிதாக ட்விட்டரில் இணையும் பயனர்கள் விரும்பும் கணக்குகளைப் பின்தொடரவும், ட்வீட்களை படிக்கவும், வீடியோ மற்றும் படங்களைப் பார்க்கவும் மட்டுமே முடியும்.
எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் இனி லைக், ரீட்விட், ரிப்ளை போன்ற அடிப்படையான வசதிகளை பயன்படுத்துவதற்குக் கூட கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் முதலில் அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றினார். ஆனால், இணையதள முகவரி இன்னும் ட்விட்டர் என்று தான் இருக்கிறது. பெயர் மாற்றத்திற்கு முன்பே ப்ளூ டிக் பெற கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். புகழ்பெற்ற சமூக வலைத்தளத்தில் இப்படி பல அதிரடி மாற்றங்களைச் செய்துவருகிறார்.
ட்விட்டருக்கு ரூ.3 கோடி அபராதம்! குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் கமுக்கமாக இருந்த எலான் மஸ்க்
இந்த வகையில் இப்போது லைக், ரிப்ளை, ரீட்வீட் செய்ய கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளார். நாட் எ பாட் (Not A Bot) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பாட் (bot) எனப்படும் தானியங்கி செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த இந்த சந்தாத் திட்டம் கொண்டுவரப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
புதிய சந்தா வசூல் திட்டம் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள பயனர்களுக்கு முதலில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த சோதனை முயற்சியில், ஏற்கெனவே உள்ள பயனர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் புதிய நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சொல்லப்படுகிறது.
இதன்படி, புதிதாக ட்விட்டரில் இணையும் பயனர்கள் விரும்பும் கணக்குகளைப் பின்தொடரவும், ட்வீட்களை படிக்கவும், வீடியோ மற்றும் படங்களைப் பார்க்கவும் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் பயனர்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக என்று கூறி, ட்வீட்களைப் பார்ப்பதற்கான வரம்பை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என்று வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3 செகண்ட்ல 100 கி.மீ. ஸ்பீடு... அலப்பறை கிளப்ப வரும் BMW M 1000 R... முன்பதிவு ஆரம்பம்