ட்விட்டருக்கு ரூ.3 கோடி அபராதம்! குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் கமுக்கமாக இருந்த எலான் மஸ்க்

ட்விட்டர் 28 நாட்களுக்குள் முழுமையான பதில் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ரூ.3.2 கோடி அபராதத்தைச் செலுத்த வேண்டும்.

Australia slaps 380,000 fine on Elon Musk's X, here's why sgb

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் ஆபாசப் பட பதிவுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசின் கேள்விக்கு முறையான பதில் அளிக்காத ட்விட்டர் சமூகவலைதளத்திற்கு ரூ.3.2 கோடி அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ட்விட்டர் சமூக வலைத்தளம் பாலியல் சுரண்டல், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான பதிவுகளை கையாளும் விதம் குறித்து அரசுக்கு முழுமையான விளக்கம் அளிக்கவில்லை. இதனால், அந்த நிறுவனத்துக்கு 610,500 ஆஸி. டாலர் அபாரதமர் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இதன் மதிப்பு சுமார் ரூ.3.20 கோடி ஆகும்.

அந்த நாட்டின் இணைய பாதுகாப்பு கண்காணிப்பு நிறுவனம் இந்த அபாரதத்தை விதித்து உத்தரவிட்டுள்ளது. "குழந்தைகளின் பாலியல் சுரண்டலைக் கையாள்வதே நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று ட்விட்டர் கூறியுள்ளது, ஆனால் அது வெற்றுப் பேச்சாக இருக்க முடியாது, உறுதியான செயல்பாடுகளுடன் கூடிய வார்த்தைகள் அதில் இருக்க வேண்டும்" என்று ஆஸ்திரேலியாவின் இணைய பாதுகாப்பு ஆணையர் ஜூலி இன்மான் கிராண்ட் கூறினார்.

13 அம்ச கோரிக்கைகள்... 2வது நாளாகத் தொடரும் ஓலா, உபர் வாடகை கார் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

Australia slaps 380,000 fine on Elon Musk's X, here's why sgb

எலான் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம் இன்னும் 28 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். அல்லது அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. ஆனால் ட்விட்டர் தரப்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று சொல்லப்படுகிறது.

கூகுள் நிறுவனத்துக்கும் ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "கூகுள் பல குறிப்பிட்ட கேள்விகளுக்கு பொதுவான பதில்களை வழங்கியுள்ளது" எனக் கூறப்படுகிறது. இதனால் முறையான பதில் அளிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜிமெயில், நியூஸ் போன்ற சில சேவைகளில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் வீடியோக்களைக் கண்டறிய சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை என்றும் கூகுள் கூறியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios