ChatGPTயாவது.. AIயாவது.! எப்பவுமே இதுதான் மேல இருக்கு - Infosys நிறுவனர் நாராயண மூர்த்தி சொன்ன குட்டி ஸ்டோரி

மனிதர்கள் செய்யும் வேலைகளை சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு எடுத்துக்கொள்ள முடியுமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி.

Either ChatGPT or AI short story told by Infosys founder Narayana Murthy

சாட் ஜிபிடி (ChatGPT) என்ற தொழில்நுட்பம் தான் உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாகி உள்ளது. சாட் ஜிபிடி என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு ஆகும்.

இது ஓபன் ஏஐ என்ற நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு ஒரு மனிதருடன் சகஜமாக உரையாடுவதுடன் அனைத்து விதமான கேள்விகளுக்கும் விடை அளிக்கிறது. கூகுள் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாக வரும் என பலரும் இந்த சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவை பாராட்டி கூறி வருகிறார்கள். அதற்கேற்ப அந்த செயற்கை நுண்ணறிவும் பலவித அசாதாரணமான காரியங்களை செய்து வருகிறது.

Either ChatGPT or AI short story told by Infosys founder Narayana Murthy

தற்போது இதுபற்றி பேசியுள்ளார் இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர் நாராயண் மூர்த்தி. செயற்கை நுண்ணறிவு மனிதர்களை மாற்றாது என்றும், மனித மனம் எப்போதும் தொழில்நுட்பத்தை விட ஒரு படி மேலே உள்ளது என்றும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு மனிதர்களை மாற்றிவிடும். மனிதர்கள் செயற்கை நுண்ணறிவை மாற்ற அனுமதிக்க மாட்டார்கள் என்ற தவறான நம்பிக்கை இருப்பதாக நான் நினைக்கிறேன்.

செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது உதவியாக மாறுவதன் மூலம் நம் வாழ்க்கையை மிகவும் வசதியாகி வருகிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் ஒவ்வொன்றும் மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் வசதியாக மாற்றியுள்ளன. கணினிகள் சில பகுதிகளில் நம் வாழ்க்கையை வசதியாக மாற்றியது. செயற்கை நுண்ணறிவு உதவியாக மாறுவதன் மூலம் நம் வாழ்க்கையை மிகவும் வசதியாக மாற்றியுள்ளது. எந்த கணினிக்கும் போட்டியாக இல்லாத மனதின் ஆற்றல் மனிதர்களுக்கு உள்ளது என்று கூறினார்.

இதையும் படிங்க..Exit Poll : வடகிழக்கு இந்தியாவை கைப்பற்றும் பாஜக - கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன.? ஒரு பார்வை

Either ChatGPT or AI short story told by Infosys founder Narayana Murthy

தொடர்ந்து இதுபற்றி பேசிய அவர், AI ஆனது மனிதர்களுக்கு மேலும் மேலும் இலவச நேரத்தை ஏற்படுத்தும்.ஓய்வு நேரத்தை அனுபவிக்காமல், மனிதர்கள் புதிய விஷயங்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவார்கள். மேலும் பிஸியாகிவிடுவார்கள்.   கடைசியாக, இதே காரணங்களுக்காக உலகம் முதலில் மொபைல் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு எப்படி பயமாக இருந்தது என்பதை உதாரணமாக கூறினார் நாராயண மூர்த்தி.

தொடர்ந்த அவர், மனித மனம் எப்போதும் தொழில்நுட்பத்தை விட ஒரு படி மேலே இருப்பதாகவும், இறுதியில் அதன் மாஸ்டர் ஆகிறது என்றும் கூறினார். இந்த கணினிகள் அனைத்தும் நம்மை மேலும் சுதந்திரமாக்கும் என்று ஒரு கட்டத்தில் பலர் நினைத்தார்கள். அது நடக்கவில்லை. எனவே நீங்கள் எந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பீர்கள் என்பது முக்கியமில்லை. மனிதன், மனித மனம் எப்பொழுதும் ஒரு படி மேலே சென்று அந்த தொழில்நுட்பத்தின் மாஸ்டர் ஆகிறது என்று செயற்கை நுண்ணறிவை பற்றி தனது கருத்தை கூறினார்.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios