உங்க சிம் கார்டு நம்பரை வேற நெட்வொர்க்கு மாற்றப் போறீங்களா? புதிய விதிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க

சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) SMS சேவைக்கான புதிய விதியை வகுத்துள்ளது. எனவே, உங்கள் சிம் கார்டை வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றுவதற்கு முன்பு இந்த விதிகள் சிலவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

DoT s new SMS rule implies to Airtel, Jio and Vodafone: check New SMS rules of TRAI here

மொபைல் நம்பரை மாற்றாமலே, ஒரு நெட்வொர் நிறுவனத்தின் சிம்மை இருந்து வேறொரு நெட்வொர்க்காக மாற்றும் பரிமாற்றம் முறை MNP Port அமலில் உள்ளது. இதன் மூலம் ஏர்டெலில் இருந்து ஜியோ, Vi-க்கோ, அல்லது Vi லிருந்து ஏர்டெலுக்கோ மாறிக்கொள்ளலாம். அவ்வாறு போர்ட் செய்யும் போது, வழக்கமான SMS சேவையில் மாற்றங்களும் உள்ளன.

மத்திய தொலைத்தொடர்பு துறை இந்த புதிய விதிகளை கொண்டு வந்தது.அதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்கம்மிங் / அவுட்கோயிங் SMS வசதியை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய சிம் கார்டுகளை செயல்படுத்திய 24 மணிநேரத்திற்கு SMS சேவைகள் முடக்கப்படும். மேலும், ஜியோ, வோடபோன்-ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்த விதியை அமல்படுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

DoT இன் புதிய விதியின்படி , தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிம் கார்டு நெட்வொர்க்கை மாற்றுவதற்கான கோரிக்கையைப் பெற்ற பிறகு, வாடிக்கையாளர்களுக்கு அதுகுறித்து தெரிவிக்க வேண்டும். பின்னர், IVRS எனப்படும் ஆட்டோமெட்டிக் வாய்ஸ்கால் மூலம் சிம் கார்டு வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை அழைத்து, அவர் தான் சிம் கார்டை மாற்ற விரும்பினாரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒரு வேளை சிம் கார்டு நெட்வொர்க்கை மாற்ற வேண்டாம் என்று பயனர், அந்த போர்ட் செயல்முறையை ரத்துசெய்ய கோரினால், உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்றும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கான இந்த புதிய வழிகாட்டுதல்கள்,  சிம் போர்ட் மோசடிகள் மற்றும் அது தொடர்பான சைபர் கிரைம்களின் அபாயத்தைத் தடுக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

Twitter அலுவலகங்கள் தற்காலிகமாக மூடல்! பணியாளர்கள் ராஜினாமா எதிரொலி!!

இதுதொடர்பாக பயனர்கள் அந்தந்த நெட்வொர்க் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்புகொண்டு முழுமையான விவரங்களைப் பார்த்துக்கொள்ளலாம். 

பார்தி ஏர்டெலின் வாடிக்கையாளர் சேவை மைய உதவி எண்: 121
ஜியோ நெட்வொர்க் சேவை மைய உதவி எண்: 1800 889 9999
வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய உதவி எண்: 199

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios