துணியை வீட்டுக்குள்ளேயே காய போடுபவர்களா..? ஹாஸ்பிட்டல் போக ரெடினு அர்த்தம்....

நாம் பயன்படுத்தும் ஆடையை, ஒரு முறை துவைத்து விட்டு அதனை  நல்ல வெயிலில் காய வைத்து, அந்த ஆடையின் நிறம் மாறுவதற்கு  முன் அதனை எடுத்து மடித்து வைத்து பயன்படுத்துவதை தான் நாம்  பொதுவாகவே செய்து வருகிறோம்..

ஆனால் சில நபர்கள்,வாஷிங் மெஷின் பயன்படுத்தி துணியை துவைத்து விட்டு, அதை எடுத்து வெயிலில் கூட காய வைக்காமல்,அப்படியே எடுத்து ரூம் அறையிலேயே சகாய வைக்கும் பழக்கம் கொண்டவர்கள் அதிகம்....

அவ்வாறு வீட்டிற்குள்ளேயே காய வைத்தால்,ஈரப்தமுள்ள காற்றில் கலந்துள்ள நுண்ணுயிரிகள் அந்த ஆடையில் ஒட்டிக்கொள்ளும்,அது மட்டுமில்லாமல் அந்த ஆடையும் ஒரு விதமான கெட்ட வாடை அடிக்க  தொடங்கிவிடும்.

மேலும் நாம் பயன்படுத்திய ஆடையில்,வியர்வை இருக்கத்தான் செய்யும்...அந்த ஆடைகளை வெயிலில் காய வைக்கும் போது தான்,  வியர்வை நாற்றம் முற்றிலும் நீங்கும்,...

இதனை எல்லாம் மறந்து விட்டு,வீட்டிற்குள்ளேயே காயப்படுவதால்,  நுரையீரல் மற்றும் தோல் வியாதி வர அதிக வாய்ப்பு உள்ளது

மேலும் ஆஸ்துமா உள்ளிட்டவையும் வர வாய்ப்பு உள்ளது...அதே போன்று,நோய் எதிர்ப்புதன்மை குறைந்து ஆரோக்கியம் அதிக அளவில்  பாதிக்கப்படும்

பின்னர் மருத்துவர்களை அணுக வேண்டிய சூழல் வரும்..எனவே இந்த பழக்கத்தை தவிர்த்து,ஆடையை சரியான முறையில் காய வைத்து  பயன்படுத்தி ஆரோகியமாக வாழலாமே...