Asianet News TamilAsianet News Tamil

புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ள DeepFake தொழில்நுட்பம்.. போலி வீடியோக்களை எப்படி கண்டறிவது?

சமீபத்தில் வைரலான நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் (DeepFake) வீடியோ தொடர்பான சர்ச்சை ஆன்லைன் பாதுகாப்பு, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை தூண்டியுள்ளது.

DeepFake technology has become a new threat.. How to spot fake videos? Rya
Author
First Published Nov 8, 2023, 11:19 AM IST | Last Updated Nov 8, 2023, 11:19 AM IST

சமூகவலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு போலி வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரப்பட்டு வந்தாலும், தற்போது Ai எனப்படும் செயற்கை நுண்னறிவு உதவியுடன் தற்போது டீப்ஃபேக் (DeepFake) தொழில்நுட்பம் புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரின் ஆடியோ, வீடியோவை செயற்கையாக ஒரிஜினல் போலவே உருவாக்க முடியும். சமீபத்தில் வைரலான நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான சர்ச்சை ஆன்லைன் பாதுகாப்பு, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை தூண்டியுள்ளது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், டீப்ஃபேக் வீடியோக்கள் என்பது தவறான தகவல்களின் மிகவும் ஆபத்தான வடிவம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “ “ஏப்ரல், 2023 இல் அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் - எந்தவொரு பயனராலும் தவறான தகவல் வெளியிடப்படுவதை உறுதி செய்வதும், எந்தவொரு பயனரால் அல்லது அரசாங்கத்தால் புகாரளிக்கப்பட்டால், தவறான தகவல் 36 மணிநேரத்தில் அகற்றப்படுவதையும் உறுதி செய்வது தளங்களின் சட்டப்பூர்வ கடமையாகும். தளங்கள் இதற்கு இணங்கவில்லை என்றால், ஐபிசி விதிகளின் கீழ் பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு வழக்கு தொடரலாம்” என்று அமைச்சர் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார்.

ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களிலிருந்து டீப்ஃபேக் படங்கள் அல்லது வீடியோக்கள் எவ்வாறு வேறுபடுகின்றன?

டீப்ஃபேக் தொழில்நுட்பமானது வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்க மேம்பட்ட இயந்திர கற்றல் வழிமுறைகளைப் (advanced machine learning algorithms) பயன்படுத்துகிறது. "ஜெனரேட்டிவ் அட்வர்சரியல் நெட்வொர்க்குகள் (GANs) எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் இந்த டீப் ஃபேக் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. 2 இயந்திர கற்றல் மாதிரிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஒன்று போலிகளை உருவாக்கவும் மற்றொன்று அவற்றைக் கண்டறியவும் பயன்படுகிறது. இந்த மறுசெயல்முறையானது மிகவும் உறுதியான போலி வீடியோக்களை உருவாக்குகிறது. எனவே இது, போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களின் நிலையான தன்மையை மிஞ்சுகிறது” என்று சைபர் செக்யூரிட்டி, டேட்டா கவர்னன்ஸ் மற்றும் டிஜிட்டல் டெக்னாலஜி நிபுணரான கனிஷ்க் கவுர், தெரிவித்தார்.

டீப்ஃபேக் வீடியோக்களை எவ்வாறு கண்டறிவது?

ஆடியோ முரண்பாடு : டீப்ஃபேக் வீடியோக்களில் வீடியோவுக்கும் ஆடியோவுக்கும் நிறைய முரண்பாடு இருக்கும். வீடியோவுக்கு சம்மந்தமில்லாத ஆடியோ இருந்தால் அல்லது ஆடியோவில் வித்தியாசங்கள் இருந்தால் அது போலி வீடியோ என்று அர்த்தம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முகபாவ முரண்பாடுகள்: இயற்கைக்கு மாறான முகபாவனைகள், பொருந்தாத உதடு ஒத்திசைவு (Lip Sink) அல்லது ஒழுங்கற்ற கண் சிமிட்டுதல் ஆகியவற்றை கண்டறிந்தால் அது போலி வீடியோவாக இருக்கலாம்.

ஆடியோ முரண்பாடுகள்: வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் இருந்தால், தொனி, சுருதி அல்லது இயற்கைக்கு மாறான பேச்சு முறைகளில் மாற்றங்களை கவனமாகக் கேளுங்கள்.

வீடியோ பேக்கிரவுண்ட் : வீடியோவி திடீரென, மங்கலாக்குதல் அல்லது சீரற்ற விளக்குகள் உள்ளதா என வீடியோவை ஆராயவும். வீடியோவின் பேக்கிரவுண்டையும் சரிபார்க்கவும். வெளிச்சமும், நிழலும் செய்றகைத்தனமாக இருந்தால் அது போலி வீடியோவாக இருக்கலாம்.

சூழல் மற்றும் உள்ளடக்கம்: வீடியோவில் உள்ள நடத்தை அல்லது அறிக்கைகள் தனிநபரின் அறியப்பட்ட குணாதிசயங்களுடன் ஒத்துப்போகிறதா என்பதை பகுப்பாய்வு செய்யவும். எடுத்துக்காட்டாக, டொனால்ட் டிரம்ப் போன்ற ஒருவரைப் பற்றி குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்தி பராக் ஒபாமா போன்ற பொது நபர் இடம்பெறும் வீடியோ மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கும்.

ஆதாரத்தைச் சரிபார்க்கவும்: ஊடகத்தின் நம்பகத்தன்மையை சரிபார்த்து உறுதிப்படுத்தவும். இது நம்பகமான மற்றும் மரியாதைக்குரிய இணையதளத்தில் இருந்து வருகிறதா அல்லது சீரற்ற யூடியூபர் அல்லது சமூக ஊடக கணக்கு மூலம் இடுகையிடப்படுகிறதா? இதுபோன்ற கணக்குகள் சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.

நம்பரை மாற்றினால் வாட்ஸ்அப் பிரைவசி கேள்விக்குறி? உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டீப்ஃபேக் தொழில்நுட்பம் தற்போது அதிநவீனமாகி வரும் நிலையில் இது போலி உள்ளடக்கத்தைக் கண்டறிவது மிகவும் சவாலானது. சிறந்த கண்டறிதல் முறைகளை உருவாக்குதல் மற்றும் AI நெறிமுறைகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருவதால், ஊடகங்களைப் பயன்படுத்தும்போது விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios