ஆஸ்திரேலியாவில் முக்கியத் துறைமுகங்களை முடங்கிய DP World சைபர் அட்டாக்! நடந்தது என்ன?
மெல்போர்ன், ஃப்ரீமண்டில், பாட்டனி மற்றும் பிரிஸ்பேன் உள்ளிட்ட துறைமுகங்களை சைபர் தாக்குதலால் பாதித்துள்ளது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சைபர் தாக்குதல் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள பல துறைமுகங்கள் தங்கள் செயல்பாடுகளை மூட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் துறைமுகங்களை நிர்வகிக்கும் DP வேர்ல்ட் நிறுவனம் கடந்த வாரம் முதல் பல மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
உள்துறை அமைச்சர் கிளேர் ஓ'நீலும் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் DP வேர்ல்டில் சைபர் தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும் சரிசெய்யும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சரக்குப் போக்குவரத்தில் கிட்டத்தட்ட பாதியை DP வேர்ல்ட் நிர்வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெல்போர்ன், ஃப்ரீமண்டில், பாட்டனி மற்றும் பிரிஸ்பேன் உள்ளிட்ட துறைமுகங்களை சைபர் தாக்குதலால் பாதித்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதுதான் ஐபோன் கேமரா செய்யும் மாயாஜாலம்! தீபாவளியில் புதிய ட்ரெண்ட் செட் செய்த ஆப்பிள்!
ஆஸ்திரேலியாவின் தேசிய இணையப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் டேரன் கோல்டி, "சைபர் தாக்குதல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு DP வேர்ல்ட் நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரேலிய அரசாங்கமும் செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். இந்தத் தற்காலிக முடக்கம் இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது என்றும் இதனால் சரக்குப் போக்குவரத்து இயக்கமும் பாதிக்கப்படுகிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
DP வேர்ல்ட் செய்தித் தொடர்பாளர் இந்தத் தாக்குதல் பற்றிக் கூறுகையில், எப்போது வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் என்பதைக் குறிப்பிடவில்லை.
ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில், 7,000க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட நிறுவனம் டிபி வேர்ல்ட். இந்த நிறுவனம் இந்தப் பிராந்தியத்தில் 18 இடங்களில் உள்ள துறைமுகங்கள் மற்றும் முனையங்களைக் நிர்வகிக்கிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையும் கூறியுள்ளது. ஆனால் கூடுதல் தகவல்கள் பற்றி விவரிக்க மறுத்துவிட்டது.
மனசை லேசாக்கும் வீடியோ கேம்... வேறு எதுவும் எனக்குத் தெரியாது: மனம் திறக்கும் எலான் மஸ்க்!