Asianet News TamilAsianet News Tamil

மனசை லேசாக்கும் வீடியோ கேம்... வேறு எதுவும் எனக்குத் தெரியாது: மனம் திறக்கும் எலான் மஸ்க்!

"நான் பல வீடியோ கேம்களை விளையாடியிருக்கிறேன். அதுதான் என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Playing video games has a calming effect on my mind, Says Elon Musk, Reveals What He Does To Calm It sgb
Author
First Published Nov 12, 2023, 6:49 PM IST | Last Updated Nov 12, 2023, 7:08 PM IST

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் என்று பல நிறுவனங்களுக்கு உரிமையாளரான தொழிலதிபர் எலான் மஸ்க் தன் வேலை நெருக்கடிகளில் இருந்து விடுபட கேம்களை விளையாடுவதாகக் கூறியிருக்கிறார்.

"வீடியோ கேம்களை விளையாடுவது என் மனதில் அமைதியை ஏற்படுத்துகிறது. வெர்சுவல் சவால்களை எதிர்கொள்வது எனது மனதில் உள்ள கொந்தளிப்பைக் குறைக்க உதவுகிறது" என்று எலான் மஸ்க் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுக்கு அளித்தப் பேட்டியில் எலான் மஸ்க் இவ்வாறு மனம் திறந்து பேசியுள்ளார்.

"நான் பல வீடியோ கேம்களை விளையாடியிருக்கிறேன். அதுதான் என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளிக்குத் தங்கம் வாங்கப் போறீங்களா? டிஜிட்டல் கோல்டு ஆஃபரைப் பாத்துட்டு பர்சேஸ் பண்ணுங்க!

"என் மனம் ஒரு புயல் போல இருக்கிறது. பெரும்பாலானவர்கள் என்னைப்போல இருக்க விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்னைப்போல இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கலாம், ஆனால் இதைப்பற்றிப் தெரியாது" என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்குடன் நீண்ட கால நட்பில் இருந்த க்ரைம்ஸ், எலான் மஸ்க்குக்கு வீடியோ கேம்களைத் தவிர வேறு பொழுதுபோக்குகளே கிடையாது என்றும் ஆனால் வீடியோ கேம்ஸையும் அவர் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வார் என்றும் கூறியிருக்கிறார்.

எலான் மஸ்க் விரும்பி விளையாடும் வீடியோ கேம்களில் ஒன்று "தி பாட்டில் ஆஃப் பாலிடோபியா" (The Battle of Polytopia). இந்த கேம் மூலம் எலான் மஸ்க் தனது திறன்களைக் மேம்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று அவரது சகோதரர் கிம்பல் குறிப்பிட்டிருக்கிறார். எலான் மஸ்க்கின் மற்றொரு பிரியமான கேம், "எல்டன் ரிங்" (Elden Ring) என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மாட்டிக்காதீங்க! போலி இணையதளங்களைத் தொடங்கி தகவல்களைத் திருடி விற்கும் கேடி கும்பல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios