விரைந்து வேலை செய்ய .....மனித மூளையுடன் இணையும் கம்பியூட்டர்....! விரைவில்..

computer is going to do work with humans mind
computer is-going-to-do-work-with-humans-mind


மனித மூளையுடன் இணையும் கம்பியூட்டர்

மனித  மூளையுடன் கம்பியூட்டர்களை  இணைத்து செயல்படும் வகையில்  புதிய  கருவியை  கண்டுபிடிக்கும்  முயற்சியில் இறங்கியுள்ளார் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

இதற்காக இவர்  நியூராலின்க் எனும் புதிய  நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின்  நோக்கம் என்னவென்றால், மனிதர்களை மென்பொருள்களுடன் இணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை  மேம்படுத்த  வேண்டும் என்பதே.

இதன் மூலம், மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையான புது முறையை அறிமுகம் செய்துள்ளார்.

இது குறித்து  கருத்து தெரிவித்துள்ள  எலான் மஸ்க், இந்த கண்டுபிடிப்பின் மூலம் மனிதர்கள்  தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும், தற்போது மருத்துவ முறைகளில் இது போன்ற சில  முறைகளை நடைமுறை  படுத்தியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் சில சாதனங்கள் மூலம்   ஒரு குறிப்பிட்ட நோய்களுக்கு தீர்வு காண முடிகிறது எனவும்  தெரிவித்துள்ளார்

அதே வேளையில் ஒரு குறிபிட்ட சில மருத்துவமனையில் மட்டும் தான் இதை தற்போது பயன்படுத்தி வருவதாகவும், இது குறித்த முழு பயன்பாடு வெளி உலகிற்கு வர சில காலம் எடுத்துக் கொள்ளும்  என்றும் தெரிவித்தார் .

எலான் மஸ்க் உருவாக்கும் நியூரோலின்க் நிறுவனத்தின் முக்கிய  திட்டமான  மனிதர்களை   கணினியுடன்  இணைக்கும் தொழிநுட்பம்  குறித்த அறிக்கை அடுத்த மாதம் அதிகாரபூர்வமாக   வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios