ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.195 ரீசார்ஜ் பிளான், 90 நாட்கள் வேலிடிட்டியுடன் 15ஜிபி டேட்டா மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. இதே விலையில் ஏர்டெல்லும் ஒரு பிளானை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த செலவில் நீண்ட கால வாலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் தேடுபவர்களுக்காக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.195 மதிப்புள்ள 90 நாள் ரீசார்ஜ் பிளான் கவனம் செலுத்துகிறது என்றே கூறலாம். இதே விலையில் ஏர்டெல் நிறுவனமும் ஒரு பிளானை வழங்கினாலும், வாலிடிட்டி மற்றும் பலன்களில் முக்கிய வித்தியாசங்கள் உள்ளன. இந்த இரண்டு பிளான்களையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.
ஜியோ பிரிபெய்ட் சிம் பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜியோவின் ரூ.195 பிளான் 90 நாட்கள் செல்லுபடியாகும் குறைந்த விலையாகும். இந்த பிளானில் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், குறைந்த செலவில் டேட்டா மற்றும் ஓடிடி பயன்பாடு மட்டுமே தேவைப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
குறிப்பாக, இந்த ரூ.195 ஜியோ பிளான் ஓடிடி ரசிகர்களுக்காக உள்ளது. திரைப்படங்கள், வெப் சீரீஸ், புதிய நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த பிளானை பிரதான ரீசார்ஜுடன் இணைத்துக்கொண்டு பயன்படுத்தலாம் என்பது ஒரு கூடுதல் பலன்.
ஜியோ ரூ.195 பிளான் மூலம் மொத்தம் 15ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா முடிந்த பிறகு, இணைய வேகம் 64kbps ஆக குறைக்கப்படும். மேலும், 90 நாட்களுக்கு Jio Hotstar மொபைல் மற்றும் டிவி சேவைகளுக்கு இலவச அணுகலும் கிடைக்கிறது. அதனால் ஓடிடி உள்ளடக்கங்களை நீண்ட காலம் பார்க்க விரும்புவோருக்கு இது ஒரு மதிப்புள்ள பிளான் ஆகும்.
இதனை ஒப்பிடும்போது, ஏர்டெல் ரூ.195 பிளான் 12ஜிபி டேட்டாவை மட்டும் வழங்குகிறது. இதில் வாலிடிட்டி 30 நாட்களாக மட்டுமே உள்ளது. கூடுதலாக, ஒரு மாதத்திற்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் அணுகல், ஏர்டெல் Xstream Play மூலம் 20-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்களையும் பார்க்க முடியும். எனவே, நீண்ட வாலிடிட்டி மற்றும் அதிக டேட்டாவை விரும்பினால் ஜியோ பிளான் சிறந்தது; குறுகிய கால ஓடிடி பயன்பாட்டுக்கு ஏர்டெல் பிளானும் பயனுள்ளதாக இருக்கும்.


