என்னது வியர்வையை வைத்து சார்ஜ் பண்ணலாமா ? அட்வான்ஸ் சார்ஜிங் டெக்னிக்

உங்கள் உடம்பில் உள்ள வியர்வையை வைத்தே உங்கள் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற கேட்ஜட்டுகளை சார்ஜ் செய்துகொள்ளும் அட்வான்ஸ் சார்ஜிங் நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Charge your smart gadgets by using your sweat in smart way

இன்றைய ஸ்மார்ட் உலகில் பல விதமான ஸ்மார்ட் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பல சாதனங்கள் பல விதத்தில் உதவியாக உள்ளன.  மேலும் இது மனிதனின் வேலையை பாதியாக குறைக்கிறது.

இந்த ஸ்மார்ட் சாதனங்களுக்கு சார்ஜர் மிக முக்கியமான ஒன்று.  ஆனால் நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் போனின் சார்ஜரை தூக்கி செல்ல முடியாது சில சமயங்களில் அதனை நாம் மறந்து விடுவதும் உண்டு. இதனால் சிலர் தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் சார்ஜரை பயன்படுத்துவர்.

சிலர் ரயில் நிலையம், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில்  சார்ஜ் செய்வார்கள் ஆனால் இவ்வாறு செய்யும்போது உங்கள் ஸ்மார்ட் போனிற்கும் அதிலுள்ள உங்கள் டேட்டாவிற்கும் பாதுகாப்பு இல்லை.

இதற்கான தீர்வு உங்கள் உடம்பிலேயே உள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சத்தின் படி உங்கள் வியர்வையிலிருந்தே உங்கள் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற சிறிய கேட்ஜட்டுகளை சார்ஜ் செய்து கொள்ளலாம். 

Google நிறுவனத்துக்கு அடுத்த அடி.. மேலும் ரூ.936 கோடி அபராதம் விதித்த மத்திய அரசு!

உங்கள் கை விரல்களில் உள்ள பிங்கர் பேடில் கார்பன் எலக்ட்ரோட்ஸ் என்ற வேதி பொருள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். உங்கள் வியர்வையில் உருவாகக்கூடிய ஆக்சிஜன் மற்றும்  லேக்டேட்  சேரும்போது அதனை ஒரு மின்சாரமாக மாற்றி அதனை பயன்படுத்தி உங்கள் கேட்ஜட்டுகளை சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று கண்டறிந்து உள்ளனர்.

இந்த பயனுள்ள அம்சத்தினை யூனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா சான் டியாகோ (University of California SAN DIEGO) உருவாக்கி உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் உங்கள் வியர்வை மட்டுமின்றி நீங்கள்  டைப் செய்யும்போதும் உங்கள் மொபைல் ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் செய்யப்படும். இதன் மூலம் எளிதாக எந்த நேரத்திலும் லேசான உடற்பயற்சி, அசைவுகள் மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த அட்வான்ஸ் சார்ஜிங் நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook யூஸ் பண்றிங்களா ? உடனே இதை செய்யுங்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios