லேப்டாப், டேப்லெட்ஸ் போன்ற சீன இறக்குமதி பொருட்களுக்கு ஆப்பு; மத்திய அரசு கொண்டு வந்தது கடிவாளம்!!

வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லெட்ஸ், கம்ப்யூட்டர், சிறிய வைக்க கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

Centre imposes restrictions to import Laptop, tablet with immediate effect

வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லெட்ஸ், கம்ப்யூட்டர், சிறிய வகை கம்ப்யூட்டர்கள் இறக்குமதி செய்ய வேண்டுமானால் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட வேண்டும். சீனாவில் இருந்து இதுபோன்ற தொழில்நுட்பப் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வைகையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், '' சோதனை, தரப்படுத்தல், மதிப்பீடு, பழுதுபார்ப்பு, திரும்பப் பெறுதல் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நோக்கங்கள் என்று 20 பொருட்கள் வரை இறக்குமதி உரிமத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy F34 : புது மொபைல் வாங்க போறீங்களா.? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க - சாம்சங் கேலக்ஸி எப்34 வருது !!

லேப்டாப்கள், டேப்லெட்டுகள், தனிப்பட்ட நபருக்கான கம்ப்யூட்டர்கள் மற்றும் சிறிய வகை கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் என்பது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமாகும். இது நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைக் கையாள்கிறது. கட்டுப்பாட்டுக்குள் வரும் தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டுமானால் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.

iPhone 15 Series : வெளியாகும் முன்பே கசிந்த ஐபோன் 15 ப்ரோ & ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் தகவல்கள்.!!

மேலும் அந்த அறிக்கையில், ''1 லேப்டாப், டேப்லெட், தனிப்பட்ட நபருக்கான கம்ப்யூட்டர் அல்லது சிறிய  கம்ப்யூட்டரை இறக்குமதி செய்வதற்கு மற்றும் இ-காமர்ஸ் போர்ட்டல்களில் இருந்து அல்லது தபால் அல்லது கூரியர் மூலம் வாங்கப்பட்டவை இறக்குமதி உரிமத் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவை இறக்குமதி வரி செலுத்துதலுக்கு உட்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பழுதுபார்க்கப்பட்ட பொருட்களின் மறு-இறக்குமதிக்கு எந்தவித லைசென்ஸ்சும் தேவையில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios