பிஎஸ்என்எல் தனது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது, இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ்களுக்கு 2% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல், பிரீபெய்ட் சிம் பயன்படுத்துவோருக்காக புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரீசார்ஜ் செய்யும் போது உடனடி 2% தள்ளுபடி கிடைக்கும். தற்போது சலுகையை ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன்-ஐடியா வழங்கவில்லை. இந்த தள்ளுபடி மூன்று திட்டங்களுக்கே பொருந்தும்.
அவை ரூ.199, ரூ.485 மற்றும் ரூ.1999 ஆகும். உதாரணமாக, ரூ.1999 ரீசார்ஜ் செய்தால் ரூ.38 தள்ளுபடி கிடைக்கும். மேலும், ரூ.199 திட்டத்தில் சுமார் ரூ.3.8, ரூ.485 திட்டத்தில் ரூ.9.6 தள்ளுபடி கிடைக்கும். சிறிய தொகை என்றாலும், அடிக்கடி ரீசார்ஜ் செய்வோருக்கு சில சேமிப்பு கிடைக்கும்.
இந்தச் சலுகை செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15, 2025 வரை செல்லுபடியாகும். ஆனால், இந்த தள்ளுபடியைப் பெற BSNL அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும். பிற ஆப்கள் மூலம் செய்தால் சலுகை கிடையாது.
மற்றொரு புறம், ஜியோவில் ரூ.1028 திட்டத்தில் ரூ.50 கேஷ்பேக் சலுகை உள்ளது. தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இதில் அடங்கும். இதனால், BSNL-ல் புதிய சலுகையில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
