151 ரூபாய்க்கு 25 OTT! ஒரே ஆப்-ல அள்ளிட்டுப் போங்க! பிஎஸ்என்எல் BiTV பிரீமியம் பேக்!
பி.எஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு BiTV பிரீமியம் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை மூலம், 25க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்கள் மற்றும் 450க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை ஒரே செயலியில் ரூ.151க்கு அணுகலாம்.

பிஎஸ்என்எல் BiTV பிரீமியம் பேக்
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் (BSNL), தனது வாடிக்கையாளர்களுக்கு பி.ஐ.டி.வி (BiTV) பிரீமியம் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன், இந்த சேவை பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, புதிய பிரீமியம் திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. இந்த சேவை மூலம், பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் ஒரே செயலியில் பல ஓ.டி.டி தளங்கள் மற்றும் நேரடி தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்கலாம். மேலும், இரண்டு மலிவான திட்டங்களும் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
BiTV பிரீமியம் பேக்
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், BiTV பிரீமியம் பேக்கை அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் 25-க்கும் மேற்பட்ட ஓ.டி.டி தளங்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை ஒரே செயலியில் அணுக முடியும். இந்த திட்டத்தின் விலை ரூ.151 ஆகும். இருப்பினும், இந்த பிரீமியம் பேக்கின் வேலிடிட்டி (validity) குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
முக்கிய OTT தளங்கள்
BiTV சேவை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அப்போது, இது அனைத்து பி.எஸ்.என்.எல் (BSNL) சந்தாதாரர்களுக்கும் இலவசமாகக் கிடைத்தது. இது பயனர்கள் ஒவ்வொரு ஓ.டி.டி (OTT) தளத்திற்கும் தனித்தனியாக சந்தா செலுத்தாமல், ஒரே சந்தாவில் பல தளங்களில் உள்ள உள்ளடக்கத்தைக் காண உதவுகிறது. ஆஹா, ஜீ5, சோனி லிவ், ஷீமரூ, சன் நெக்ஸ்ட், சௌபால், லயன்ஸ்கேட், ஈ.டி.வி வின், டிஸ்கவரி மற்றும் எபிக் ஆன் போன்ற ஓ.டி.டி தளங்களை இந்த பி.ஐ.டி.வி சந்தா மூலம் பி.எஸ்.என்.எல் மொபைல் வாடிக்கையாளர்கள் அணுகலாம்.
குறைந்த விலையில் மேலும் 2 திட்டங்கள்
அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரே ஒரு பிரீமியம் பேக்கை மட்டுமே அறிவித்திருந்தாலும், இரண்டு மலிவு விலைத் திட்டங்களையும் பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளதாக 'டெலிகாம்தாக்' என்ற செய்தி அறிக்கை கூறுகிறது.
• ரூ.28 திட்டம்: 30 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், ஏழு ஓ.டி.டி தளங்களை அணுக முடியும். அவை: லயன்ஸ்கேட் ப்ளே, ஈ.டி.வி வின், வி.ஆர்.ஓ.டி.டி, பிரீமியம்ஃப்ளிக்ஸ், நம்மஃப்ளிக்ஸ், குஜாரி மற்றும் ஃபிரைடே. மேலும், ஒன்பது இலவச ஓ.டி.டி தளங்களும் இதில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
ரூ.29 திட்டம்
• ரூ.29 திட்டம்: இந்த திட்டமும் 30 நாட்கள் செல்லுபடியாகும். இது ரூ.28 திட்டத்தைப் போன்ற அதே பலன்களைக் கொண்டுள்ளது. ஆனால், இதில் இடம்பெறும் ஓ.டி.டி தளங்கள் வேறுபட்டவை. இந்த திட்டத்தில் ஷீமரூமீ, லயன்ஸ்கேட் ப்ளே, டங்கல் ப்ளே மற்றும் வி.ஆர்.ஓ.டி.டி ஆகியவை அடங்கும்.
மேலும், ரூ.151 திட்டமும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.