BSNL வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!

மத்திய அரசு நிறுவனமான BSNL இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அன்லிமிடட் கால், 300 எஸ்எம்எஸ் மற்றும் இன்டெர்நெட் டேட்டா ஆகியவை வழங்கப்படுகிறது.

BSNL Introduces 2 New Rs 439, Rs 1198 Plans click here for more information

மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1198 மற்றும் ரூ.439 ஆகிய இரண்டு புதிய ரீசார்ஜ்  திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்கள் கிடைத்தாலும், ஒரு சில பகுதிகளில் இந்தச் சலுகையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.

பிஎஸ்என்எல் இன் இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அன்லிமிடட் கால், 300 எஸ்எம்எஸ் மற்றும் இணைய பயன்பாட்டிற்கான டேட்டாவை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் இன் தீபாவளி ஆஃபர் திட்டங்களைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் இன் ரூ.1198 ரீசார்ஜ் திட்ட, விவரங்கள் :

பிஎஸ்என்எல் இன் ரூ.1198  ரீசார்ஜ் திட்டமானது நீண்ட காலத் திட்டமாகும்.   ரூ.1198  ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 3 Gb டேட்டா , 300 நிமிட அழைப்பு  மற்றும் 30 SMS என 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் இது புதுப்பிக்கப்படும்.

Vi வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!

பிஎஸ்என்எல் ரூ.439 திட்ட விவரங்கள் :

தொலைத்தொடர்பு ஆபரேட்டர் அறிவித்த இரண்டு தீபாவளி திட்டங்களில் முக்கியானது ரூ.439 ரீசார்ஜ்  திட்டமாகும். இது மிகவும் மலிவு விலையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, பயனர்களுக்கு 90 நாட்களுக்கு அன்லிமிடட் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் வரை பெறலாம். ஆனால், இதில் எந்த டேட்டா பேக்கும் கிடையாது. 

இந்த இரண்டு திட்டங்களைத் தவிர, அக்டோபர் 22 முதல் அக்டோபர் 28 வரையில் ரூ.110 க்கு ரீசார்ஜ் செய்தால்  ஃபுல் டாக் டைம்  வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios