Vi வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!

Vi வோடாஃபோன் ஐடியா நெட்வொர்க்கில் குறிப்பிட்ட சில ரீசார்ஜ் பிளான்களில் இருந்து Netflix, Prime, Hotstar ஆஃபர்கள் அகற்றப்பட்டுள்ளன.

These Vi plans with free Netflix, Prime and Hotstar subscription removed click here for more info

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடோபோன் ஐடியா ( Vi ) இதுவரையில் வழங்கி வந்த REDX போஸ்ட்பெய்டு திட்டங்களை தற்போது நிறுத்தி உள்ளது. இதனால் முக்கிய OTT இயங்குதளங்களுக்கான இலவச சந்தாக்களை வழங்கும் திட்டம் இப்போது புதிய பயனர்களுக்கு கிடைக்காது.
இதுதொடர்பாக டெலிகாம் டாக் இணையதளத்தில் செய்தி வந்துள்ளது. அதன்படி, REDX போஸ்ட்பெய்டு திட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் அதே திட்டத்தில் தொடர்ந்து இருப்பார்கள். புதிய வாடிக்கையாளர்களுக்கு REDX திட்டத்தின் கீழ் சேர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

REDX திட்டத்தின் பலன்கள் :

வோடோபோன் ஐடியா ( Vi ) நிறுவனத்தின் பிரபல REDX திட்டங்களில் ரூ.1099, ரூ.1699 மற்றும் ரூ. 2299 ஆகியவை அடங்கும். இந்தத் திட்டங்கள் பல குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கின. இலவச காலிங் மற்றும் தினசரி இலவச எஸ்எம்எஸ்களை தவிர இந்த திட்டம் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவற்றுக்கான இலவச சந்தாக்களை வழங்கியது.

இத்தனை நன்மைகள் கொண்ட இந்த திட்டத்தினை அந்நிறுவனம் ஏன் நிறுத்தியது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனை திடீரென நிறுத்தியுள்ளதால் வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதே போன்ற பிற திட்டங்கள் :

Vi நிறுவனம் பல சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. Vi போஸ்ட்பெய்ட் திட்டங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: - தனிநபர் மற்றும் ஃபேமிலி பிளான்கள். தனிநபர் பிரிவில் ரூ.399, ரூ.499 மற்றும் ரூ. 699 திட்டங்கள் உள்ளன . இதில், நிறுவனம் அன்லிமிடட் டேட்டாவை வழங்குகிறது. இது தவிர, பிரைம் வீடியோ, Zee5 மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவற்றிற்கு இலவச சந்தாவும் இந்த திட்டங்களில் வழங்கப்படுகிறது.

இனி இந்த தளத்தில் Google Chrome வராது! உடனே என்னனு பாருங்க!!

ஃபேமிலி பேக் திட்டத்தில் ரூ.699க்கான போஸ்ட்பெய்டு திட்டமும் கிடைக்கிறது. இதில், இரண்டு இன்டெர்நெட் சிம் வசதிகளுடன் 80 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, ரூ. 999 மற்றும் ரூ.1299 திட்டங்களும் ஃபேமிலி பிளானில் கிடைக்கின்றன.

இதில் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு 300 ஜிபி வரை டேட்டாவை Vi நிறுவனம் வழங்குகிறது. மேலும், இவற்றில் 5 குடும்ப உறுப்பினர்கள் வரை சேர்க்கலாம். அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவற்றிற்கான இலவச சந்தாவும் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios