ரூ.98 விலையில் தினமும் 1.5 ஜிபி..! பிஎஸ்என்எல் அதிரடி..!
பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து உள்ளது.டேட்டா சுனாமி என அழைக்கப்படும் புதிய சலுகை 26 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
ரூ.98 விலையில் கிடைக்கும் புதிய சலுகை
தினமும் 1.5 ஜிபி வீதம் மொத்தம் 39 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
புதிய பிஎஸ்என்எல் சலுகையில் டேட்டா தவிர வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறது.
ஜியோ சார்பில் ரூ.98 விலையில் பிரீபெயிட் சலுகை
தினமும் 2 ஜிபி டேட்டா,
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
கால அவகாசம்: 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
பாரதி ஏர்டெல்:
ரூ.92 விலையில் 6 ஜிபி டேட்டா சுமார் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.99 சலுகை
ரூ.99 சலுகையில் 26 நாட்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (லோக்கல்/எஸ்டிடி மற்றும் ரோமிங்) வழங்கப்படுகிறது.
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மும்பை மற்றும் டெல்லியில் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
பிஎஸ்என்எல்: ரூ118 விலையில் பிரீபெயிட் சலுகை
ரூ.118 விலையில் பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டது.
இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
கால அவகாசம்:
28 நாட்கள்
ஜியோ வருகைக்கு பின்,
அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் ஏற்கனவே வழங்கி வந்த கட்டண சேவையை வெகுவார குறைத்து , மிக குறைந்த விலையில் சேவையை வழங்கி வருகிறது. இதற்கு முழுமுதற்காரணம் ஜியோ மட்டுமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை