ஜியோவை முந்தியது பிஎஸ்என்எல்...! ரூ.339 திட்டம்.. ஒரு நாளைக்கு 2 ஜிபி, மாதத்திற்கு56 ஜிபி
ஜியோவை முந்தியது பிஎஸ்என்எல்...! ரூ.339 திட்டம்.. ஒரு நாளைக்கு 2 ஜிபி, மாதத்திற்கு56 ஜிபி
ஜியோவின் அதிரடி சலுகையால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் போட்டியை சமாளித்து சந்தித்து வருகின்றன. அதன்படி ஜியோவிற்கு எதிராக பல புது புது சலுகைகளை மற்ற தொலைத்தொடர்பு நிருவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம், ஜியோவிற்கு போட்டியாக, அதற்கு இணையான சலுகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்தகட்டமாக பொதுத்துறை நிறுவனமான , பிஎஸ்என்எல் நிறுவனம்,தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை வழங்குவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை நேற்று வெளியிட்டது . அதன்படி,
ரூ.399 திட்டம்
28 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும் இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 2GB வீதம் மாதத்திற்கு 56 GB வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு நாளைக்கு 25 நிமிடங்கள் வரை, வரம்பற்ற அழைப்புகளை பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்ப்பு சலுகையானது , இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகை, ஜியோவை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதால், வாடிக்கையாளர்கள் பிஎஸ்எல்எல் பக்கம் திரும்புவார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது