Asianet News TamilAsianet News Tamil

மிரட்டும் ஸ்டைல்.. பல்வேரு அம்சங்கள்.. தரமா 2 கார்களை இந்தியாவில் களமிறங்கிய BMW - விலை என்ன? முழு விவரம்!

BMW Cars : சுமார் 26 ஆண்டுகளாக இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்து வருகின்றது ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான BMW. சுமார் 107 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழமையான கார் தயாரிப்பு நிறுவனங்களில் BMW நிறுவனமும் ஒன்று.

BMW India Launched i7 m70 xdrive and 740d m sport from 7 series price and full specs ans
Author
First Published Oct 19, 2023, 9:07 PM IST

BMW : இந்தியாவில் உள்ள பிரபல BMW நிறுவனம் இரண்டு புத்தம்புதிய வாகனங்களை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் BMW i7 M70 xDrive மற்றும் புதிய BMW 7 தொடரிலேயே உயர் செயல்திறன் கொண்ட டீசலில் இயங்கும் 740d M Sport என்ற இரு கார்கள் தான் அது. இந்த மாடல்கள் இப்போது அனைத்து BMW இந்தியா டீலர்ஷிப்கள் மூலம் பயனர்கள் வாங்கலாம். 

BMW குழுமத்தின் இந்தியாவின் தலைவர் திரு. விக்ரம் பவாஹ், இந்த புதிய மைல்கல்லை எட்டியது குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார், அவர் பேசுகையில்.. “ இந்த புதிய BMW 7 சீரிஸ், சொகுசு செடான் வகையை சேர்ந்ததாகும். அதன் புதிய வடிவமைப்பு, சக்திவாய்ந்த இயக்கவியல், சௌகரியம் மற்றும் டிஜிட்டல் இயக்கத்துடன் மிகவும் தரமான காராக இருக்கும்" என்றார். 

எல்லாரும் ரெடியா?.. Count Downஐ துவங்கிய OnePlus.. அறிமுகமாகும் "Open".. விலை என்ன? பல சுவாரசிய தகவல்கள் இதோ!

BMW i70 M70 xDrive 

BMW i7 m70 xdrive

எலக்ட்ரிக் காரான இது, ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 560 கிமீ என்கிற வரம்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது 101.7 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. i7 M70 மாடல் காரனது வெறும் 3.7 வினாடிகளில் 0லிருந்து 100 km/h வேகத்தை எட்ட முடியும் என்றும், எலக்ட்ரானிக் முறையில் 250 km/h என்ற அதிகபட்ச வேகம் கொண்டது என்றும் BMW தெரிவித்துள்ளது. 

தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் சார்ஜர், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் 36-ஸ்பீக்கர் போவர்ஸ் & வில்கின்ஸ் ஒலி அமைப்பு இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது, இதன் விலை சுமார் 2.5 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

BMW 740d M Sport 

பெரும்பாலான நவீன பிஎம்டபிள்யூக்களைப் போலவே, இந்த புதிய 7 சீரிஸும் ஒரு பெரிய கிரில் மற்றும் ஸ்பிலிட் ஹெட்லேம்ப்களைக் கொண்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. காரின் உள்ளே, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 14.9 இன்ச் touch Screen இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. i7 ஐப் போலவே, டீசல் 7 சீரிஸும் பின்புறத்தில் 31.3-இன்ச் 8K மானிட்டர் மற்றும் பின்புற கதவு கைப்பிடிகளில் நிலைநிறுத்தப்பட்ட 5.5-இன்ச் தொடுதிரைகளுடன் வருகிறது.

BMW 740d M Sport ஆனது 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 282 BHPயில் 4,000 rpm மற்றும் 650 Nmயில் 1,500-2,500 rpm கொண்டு செய்லபடும். இந்த எஞ்சின் 48V மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இதன் விலை 1.81 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13.. அசத்தலான Snapdragon Processor.. வெளியான Oppo Find N3 - விலை என்ன தெரியுமா? Full Spec இதோ!

Follow Us:
Download App:
  • android
  • ios