எல்லாரும் ரெடியா?.. Count Downஐ துவங்கிய OnePlus.. அறிமுகமாகும் "Open".. விலை என்ன? பல சுவாரசிய தகவல்கள் இதோ!

சீனா தயாரிப்புகள் உலக அளவில் மிகவும் பிரபலம், அந்த வகையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் தனது போன்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் தான் OnePlus என்ற நிறுவனம். உலக அளவில்  ஸ்மார்ட்போன்கள், இயர்போன்கள், பவர்பேங்குகள், செல் போன் கவர்கள், சட்டைகள், பைகள், தொலைக்காட்சி பெட்டிகள், ஸ்மார்ட் கடிகாரம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றது.

OnePlus Open launching today in India Price Expectations and Full Specifications here ans

இந்நிலையில் இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகின்றது OnePlus நிறுவன போன்கள் என்றால் அது மிகையல்ல. மேலும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கொண்ட நிறுவனமாக OnePlus திகழ்ந்து வரும் இந்த நிலையில், அந்த நிறுவனம் இன்று தனது புதிய போன் ஒன்றை உலக அளவில் வெளியிடவுள்ளது. இன்று அக்டோபர் 19ம் தேதி மாலை 7.30 மணியளவில் இந்த போன் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது.

OnePlus Open என்ற இந்த புதிய போன் இந்தியா உள்ளிட்ட உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த போன் இன்று மாலை 7:30 மணிக்கு, மும்பையில் வெளியிடப்படும், மற்றும் அந்த நிகழ்வு OnePlus நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTubeல் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

14,000 ஊழிர்களை பணிநீக்கம் செய்யும் நோக்கியா! நெருக்கடியில் தாக்குப்பிடிக்க தடாலடி முடிவு

இந்த ஃபோன், விலை மற்றும் அம்சங்களின் அடிப்படையில் Samsung நிறுவனத்தின் Galaxy Z Fold 5க்கு போட்டியாக, அதை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus நிறுவனம் அதன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இன்று உலகளவில் அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

OnePlus Open ஆனது OnePlus மற்றும் அதன் தாய் நிறுவனமான OPPO ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் ஏற்கனவே OPPO நிறுவனம் Find N2 Flip மற்றும் N3 Flip ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் OPPO ஏற்கனவே இந்தியாவில் மடிக்கக்கூடிய போன்கள் பிரிவில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விலை என்ன இருக்கலாம்?

இந்த OnePlus Open, சாம்சங் நிறுவனத்தின் Galaxy Z Fold 5 போன்க்கு போட்டியாக வரவுள்ளதால், இந்த போனின் விலை ரூ.1,30,000 முதல் ரூ.1,40,000 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

Specifications 

7.82 இன்ச் மற்றும் 6.31 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளேக்கள் இதில் பொறுத்தப்பட்டிருக்கலாம், மேலும் 2,800-நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் 120Hz Fresh Rate இதில் இருக்க வாய்ப்புகள் உள்ளது. Snapdragon 8 Gen 2 ப்ரோசசர் உள்ளது, பின்புற முதன்மை கேமரா 48MP + 48MP அல்ட்ராவைடு + 64MP டெலிஃபோட்டோ பொருத்தப்பட்டுள்ளது. 

விரைவில் வருகிறது புதிய ஆப்பிள் பென்சில்! உள்ளே ஒளிந்திருக்கும் ட்விஸ்ட் என்ன தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios