பில் கேட்ஸ் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்.... அவரே அந்த போனை வாங்கலையா..?

முன்னதாக ஐபோனிற்கு பதில் ஆண்ட்ராய்டு சாதனத்தை பயன்படுத்துவே தான் விரும்புவதாக பில் கேட்ஸ் தெரிவித்து இருந்தார். 

Bill Gates uses a Samsung Galaxy Z Fold 3 instead of Microsoft Surface Duo

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தனது சொந்த நிறுவன தயாரிப்பான சர்பேஸ் டுயோ ஸ்மார்ட்போனிற்கு பதிலாக சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போனினை பயன்படுத்தி வருவதாக தெரிவித்து இருக்கிறார். ரெடிட் தளத்தில் நடைபெற்ற உரையாடலின் போது இந்த தகவலை பில் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

சாம்சங் போன்:

ஏற்கனவே பல சமயங்களில் பில் கேட்ஸ் தான் ஆண்ட்ராய்டு சாதனத்தை பயன்படுத்தி வருவதாக அறிவித்து இருக்கிறார். போல்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது அதன் டிஸ்ப்ளேவை போர்டபில் கணினியாக பயன்படுத்துவேன் என தெரிவித்து உள்ளார். இவர் இன்றும் சாம்சங் ஸ்மார்ட்போனை  பயன்படுத்தி வருகிறார். சாம்சங் நிறுவத்துடனான கூட்டணியை அடுத்து நிறுவனத்தின் பல்வேறு சாதனங்கள் விண்டோஸ் தளத்தில் சீராக இயங்க செய்கிறது. 

முன்னதாக ஐபோனிற்கு பதில் ஆண்ட்ராய்டு சாதனத்தை பயன்படுத்துவே தான் விரும்புவதாக பில் கேட்ஸ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், முகல் முறையாக தான் எந்த ஸ்மார்ட்போனினை பயன்படுத்துகிறேன் என்பதை பில் கேட்ஸ் வெளிப்படயாக தெரிவித்து உள்ளார். 

Bill Gates uses a Samsung Galaxy Z Fold 3 instead of Microsoft Surface Duo

புது அப்டேட்:

இதன் இடையே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறி பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடல் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட மேம்பட்ட டிஸ்ப்ளே, கேமரா மற்றும் பிராசஸர்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 108MP பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ், டெலிபோட்டோ கேமரா, 3X ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர், 4440mAh பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios