ROG Phone 5s : மிரட்டல் ஸ்பெக்ஸ் - அசத்தல் டிசைன் - அசுஸ் கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்
அசுஸ் ROG போன் 5s மற்றும் ROG போன் 5s ப்ரோ மாடல்கள் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
அசுஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ROG போன் 5s மற்றும் ROG போன் 5s ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. இரு கேமிங் ஸ்மார்ட்போன்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கின்றன. இத்துடன் 6.78 இன்ச் FHD+ சாம்சங் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா சென்சார்கள், 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
அசுஸ் ROG போன் 5s மற்றும் ROG போன் 5s ப்ரோ அம்சங்கள்
இரு ஸ்மார்ட்போன்களிலும் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ROG UI வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.78 இன்ட் FHD+ சாம்சங் AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், 2.5D வளைந்த கிளாஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அசுஸ் ROG போன் 5s ப்ரோ மாடிலன் பின்புற பேனலில் சிறிய PMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 660 GPU வழங்கப்பட்டு உள்ளது. அசுஸ் ROG போன் 5S மாடலில் அதிகபட்சமாக 125GB LPDDR5 ரேம், 256GB UFS3.1 மெமரியும், ROG போன் 5S ப்ரோ மாடலில் 18GB LPDDR5 ரேம், 512GB UFS3.1 மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் 64MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5MP மேக்ரோ சென்சார், 24MP செல்ஃபி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புறம் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு அசுஸ் ROG போன் 5S மற்றும் ROG போன் 5S ப்ரோ மாடல்களில் 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் அசுஸ் ROG போன் 5S மற்றும் ROG போன் 5S ப்ரோ என இரு மாடல்கலிலும் டூயல் செல் 6000mAh பேட்டரிகள், 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கின்றன. இரு மாடல்களும் அளவில் 172.83x77.25x9.9mm இருக்கின்றன. இவற்றின் எடை 238 கிராம்கள் ஆகும்.
விலை மற்றும் விற்பனை விவரம்
அசுஸ் ROG போன் 5S மாடலின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 49,999 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 57,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அசுஸ் ROG போன் 5S ப்ரோ விலை ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் பிப்ரவரி 18 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அசுஸ் ROG போன் 5S மாடல் ஃபேண்டம் பிளாக் மற்று் ஸ்டாம் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
புதிய அசுஸ் ROG போன் 5S ப்ரோ மாடல் ஃபேண்டம் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. முன்னதாக இந்த கேமிங் ஸ்மார்ட்போன் மாடல்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.