Nudify என்று தேடும் நெட்டிசன்ஸ்... ஆபாசப் படங்களை உருவாக்க உதவும் Deepfake ஆப்ஸ் பயன்பாடு அதிகரிப்பு!

பெண்களை ஆபாசமாக சித்தரிக்க உதவும் Deepfake மென்பொருட்கள் பிரபலம் அடைந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Apps That Use AI To Undress Women In Photos Gaining Popularity: Report sgb

பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரிக்க உதவும் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் மற்றும் இணையதளங்கள் பிரபலமடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செப்டம்பரில் மட்டும், 2.4 கோடி பேர் இதுபோன்ற இணையதளங்களைப் பார்வையிட்டுள்ளனர் என நிறுவனமான கிராஃபிகா கண்டறிந்துள்ளது. ஆபாச சித்தரிப்புக்கு பயன்படுத்தப்படும் இந்த இணையதளங்கள் பல பிரபலமான சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்யப்படுகின்றன என்றும் ஆய்வு கூறுகிறது.

உதாரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ட்விட்டர் மற்றும் ரெட்இட் உட்பட சமூக ஊடகங்களில் ஆபாச சித்தரிப்பு செயலிகள் மற்றும் இணையதளங்களை விளம்பரப்படுத்துவது 2,400 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LSSD உலகளாவிய பட்டியல்.. 2ம் இடத்தில் இந்தியாவில் உள்ள Green Park - சர்வே ரிப்போர்ட் பார்த்து குஷியான அதானி!

படங்களை ஆபாசமாகச் சித்தரிக்க AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. இதன் மூலம் ஒருவரின் படத்தை நிர்வாணமாகவும் சித்தரிக்க முடிகிறது. இந்த வசதியைக் கொடுக்கும் செயலிகளும் இணையதளங்களும் பெரும்பாலும் பெண்களைத் தவறாகச் சித்தரிக்க மட்டுமே பயன்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Apps That Use AI To Undress Women In Photos Gaining Popularity: Report sgb

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால், அசல் போல காட்சியளிக்கும் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்டு பகிரப்படும் போக்கு அதிகமாகி வருகிறது. டீப்ஃபேக் (Deepfake) ஆபாசப் படங்கள் எனப்படும் இந்த போலியான சித்தரிப்புகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் படங்களை வைத்து உருவாக்கப்படுகின்றன.

பல செயலிகளும் இணையதளங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பைவிட மிகத் துல்லியமான படங்களை உருவாக்கக்கூடிய அளவுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தில், "நிர்வாணப் படங்களை உருவாக்கலாம்" என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் ஸ்பான்சர் வீடியோவாகவும் விளம்பரம் செய்யப்படுகிறது. "nudify" என்ற வார்த்தை பயன்படுத்தி தேடும்போது அந்த வீடியோ முதலில் தோன்றுகிறது.

ஆனால், வெளிப்படையாக இருக்கும் பாலியல் ரீதியான விளம்பரங்களை கூகுள் நிறுவனம் அனுமதிப்பதில்லை என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். அப்படி இருந்தால், அவற்றை அகற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரெட்இட் சமூக வலைத்தளத்தில் போலியான, பாலியல் ரீதியான பதிவுகளை தடைசெய்துள்ளது என்றும் மற்றும் அந்த வகையில் பல வெப் டொமைன்களை தடை செய்துள்ளதாகவும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்திடம் ஆபாச விளம்பரங்கள் மீதான நடவடிக்கை குறித்து விவரம் அறிய முயன்றபோது, பதில் கிடைக்கவில்லை.

விரல்கள் இல்லாத நபருக்கு ஆதார்! கைரேகை பதிவு கட்டாயமில்லை என மத்திய அமைச்சர் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios