ஆப்பிள் நிறுவனம் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் தளத்தை முடக்கும் வகையிலான நடவடிக்கையில் இருப்பதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்

கடந்த அக்டோபர் மாத இறுதியில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார். இதனையடுத்து பல சர்ச்சைகள் எழுந்தன. ஊழியர்கள் பணி நீக்கம், ராஜினாமா, ப்ளூ டிக் சர்ச்சை, பங்குகள் வீழ்ச்சி, விளம்பரதாரர்கள் புறக்கணிப்பு என அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டன. 

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது ‘ஆப் ஸ்டோரில்’ இருந்து டுவிட்டர் செயலியை நீக்கப் போவதாக தெரிவதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எலான் மஸ்க் வரிசையாக தனது டுவிட்டர் பக்கத்தில் சில ட்வீட்களையும், ரீடுவீட்களையும் செய்துள்ளார். அதன்படி, எந்தவித காரணமும் இல்லாமல் ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டர் செயலி நீக்கப்படுகிறது என்றும், அதோடு விளம்பரங்களையும் நிறுத்தி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Scroll to load tweet…

மேலும், ‘அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் இருப்பதை ஆப்பிள் நிறுவனம் விரும்பவில்லை போலும். நீங்கள் ஆப் ஸ்டோரில் இருந்து வாங்கும் தயாரிப்புகளில் மறைமுகமாக 30 சதவீதம் வரியை ஆப்பிள் நிறுவனம் வசூலிக்கிறது’ என்று எலான் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார். எலான் மஸ்கின் இந்த ட்வீட்களைத் தொடர்ந்து, அவரைப் பின்தொடர்பவர்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக ரீட்வீட் செய்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் தரப்பில் இதுதொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

Scroll to load tweet…

Scroll to load tweet…

ஆப்பிள் நிறுவனம் இவ்வாறு சமூக ஊடக செயலிகளை முடக்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு டுவிட்டரைப் போன்று செயல்பட்டு வந்த Parler என்ற செயலியை ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து அகற்றியது. சில மாதங்களுக்குப் பிறகே, மீட்டு கொண்டு வரப்பட்டது. அப்போது ஆப்பிள் தரப்பில் பார்லர் செயலி நிறுவனத்திடம் ‘சில தேடல் அம்சங்களை நீக்குமாறு’ அறிவுறுத்தியது. அதற்கு பார்லர் ‘ஆப்பிள் சில நல்ல தயாரிப்புகளை உற்பத்தி செய்து வந்தாலும், சில நேரங்களில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுகிறது’ என்று குற்றம்சாட்டியது.

Scroll to load tweet…

பார்லர் செயலிக்கு ஏற்பட்ட அதே நிலைமை தான் தற்போது டுவிட்டருக்கும் ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்க்கும் அதே குற்றத்தை தான் முன்வைக்கிறார். இந்த சர்ச்சைக்களுக்கு மத்தியில், இதே நிலை தொடர்ந்தால், எலான் மஸ்க் புதிதாக ஸ்மார்ட்போன் நிறுவனம் தொடங்குவதற்கும் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனெனில், இதற்கு முன்பு இதே கேள்வியை டுவிட்டர்வாசி ஒருவர் எலான் மஸ்க்கை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார். 

Twitter Blue Tick வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தம், பணி நீக்கமும் இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பு!

அதில், ‘ஒருவேளை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்தும், கூகுளில் ப்ளே ஸ்டோரில் இருந்தும் டுவிட்டர் செயலி நீக்கப்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், ’நாமே புதிய ஸ்மார்ட்போன், புதிய தளத்தை ஆரம்பித்துவிட வேண்டியது தான்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.