யாரும் எதிர்பார்க்கல... பட்டுனு புது பிராசஸர் அறிமுகம் செய்த ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் மார்ச் மாத நிகழ்வில் புதிய M1 அல்ட்ரா பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் M1 சிலிகான் பிராசஸர்களில் புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஆப்பிள் வெளியிட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த பிராசஸர் ஆகும். புதிய ஆப்பிள் M1 அல்ட்ரா மாடலில் இரண்டு M1 மேக்ஸ் பிராசஸர்கள் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்ய ஆப்பிள் புதிய அல்ட்ரா ஃபியூஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
இதில் மொத்தம் 20-கோர் CPU, 64-கோர் GPU மற்றும் 32-கோர் நியூரல் என்ஜின் உள்ளது. புதிய M1 அல்ட்ரா மாடலில் இரண்டு வெவ்வேறு M1 மேக்ஸ் சிப்செட்கள் ஒரு பிராசஸராக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரு பிராசஸர்களை ஒருங்கிணைக்கும் ஆப்பிள் அல்ட்ரா ஃபியூஷன் பேக்கேஜிங் ஆர்கிடெக்ச்சர், 2.5 TB/s லோ லேடென்சியை வழங்குகிறது. இரு பிராசஸர்கள் இணைக்கப்பட்டு இருந்தாலும் M1 அல்ட்ரா ஒரே பிராசஸர் போன்று இயங்குகிறது.
M1 அல்ட்ரா பிராசஸரில் மொத்தம் 20-கோர் CPU உள்ளது. இதில் மொத்தம் 16 உயர் திறன் கொண்ட கோர்கள், நான்கு எஃபீஷியன்ஸி கோர்கள், 64 கோர் GPU உள்ளது. இது வழக்கமான M1 சிப்செட்டை விட 8 மடங்கு அதிவேகமானது ஆகும். மற்ற ஆப்பிள் சிலிகான் பிராசஸர்களை போன்று M1 அல்ட்ரா பிராசஸரும் 128GB வரையிலான யுனிஃபைடு மெமரியுடன் வருகிறது. M1 அல்ட்ரா பிராசஸரின் மீடியா என்ஜினும் அப்கிரேடு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் புதிய பிராசஸர் அதிகபட்சம் 18, 8K ப்ரோ ரெஸ் 422 தர வீடியோக்களை ஸ்டிரீம் செய்யும். இது வழக்கமான 16 கோர் டெஸ்க்டாப் பிராசஸரை விட 90 சதவீதம் அதிக மல்டி-திரெடெட் திறன் வழங்கும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. இதில் உள்ள 64-கோர் GPU, தற்போது 200-க்கும் குறைந்த திறன் கொண்ட PC GPU-க்களில் மிகவும் அதிக திறன் கொண்டுள்ளது. இந்த பிராசஸர் ஆப்பிள மேக் ஸ்டூடியோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.