Apple iPhone SE : ரூ 43,900 முதல்..! புதிய மாடல் ஐபோன் அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம்..

Apple iPhone SE உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட ஆப்பிள் நிறுவனத்தின் 2022-ம் ஆண்டின் முதல் மெகா நிகழ்வு நடைபெற்றது. இதன் அசத்தல் அறிவிப்புகள் இதோ...

Apple launches new iPhone SE starting from Rs 43,900 pre-booking from march 11

ஆப்பிள் ஐபோன் நிறுவனம் நடப்பு 2022-ம் ஆண்டின் முதல் மெகா அறிவிப்பு நிகழ்ச்சியை நேற்று இரவு நடத்தியது, இதில் Apple iPhone SE புதிய மாடல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iPhone SE 2022, iPad Air 2022 ஆகிய அறிவிப்புகள் M1 அல்ட்ரா சிப், ஸ்டுடியோ டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்களுடன் முழு விளக்கம் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. iPhone SE 2020 மாடலுடன் ஒப்பிடும்போது, iPhone SE 2022 மாடல் 1,000 ரூபாய் மட்டுமே அதிகம் என்றாலும், இது திடக்க விலை மட்டுமே. 64 ஜிபி,128 ஜிபி, 256 ஜிபி உள்ளிட்ட மாடல்களில் ஐபோன் எஸ்.ஈ 2022 கிடைக்கும். இது A15 Bionic Chip தொழில்நுட்பத்துடன், பயன்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களோடு உச்சகட்ட செயல்திறன் (Peek Performance) என்ற இலக்கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Apple launches new iPhone SE starting from Rs 43,900 pre-booking from march 11

iPhone SE 3 அல்லது iPhone SE 2022 என்று அழைக்கப்படும் இந்த மாடல், மார்ச் மாதம் 11-ம் தேதி அதாவது நாளைய மறுநாள் முதல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யும்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் நிறுவனத்தின் நேரடி ஷோரூம்கள் மட்டுமின்றி, அங்கீகரிக்கப்பட்டுள்ள டீலர்கள் கடைகளிலும் இதை மார்ச் 11 முதல் முன்பதிவு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில ஆன்லைன் சேவைகளிலும் இவை கிடைக்கும். தரம் உயர்த்தப்பட்ட 12 மெகாபிக்ஸல் கேமராவில், f/1.8 வைட் ஆங்கிள் லென்ஸ் வசதியுடன் இந்த ஐபோன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4.7 இன்ச் டிஸ்ப்ளே, முன்புறம் மற்றும் பின்புறத்தில் கடினமான அதிர்வுகளை தாங்கக்கூடிய கண்ணாடி வடிவமைப்பில் ஐபோன் எஸ்.ஈ 2022 வடிவமைக்கப்ப்ட்டுள்ளது. மார்ச் மாதம் 18 தேதி முதல் இந்த வகை ஐபோன்கள் மார்கெட்டில் நேரடியாக வாங்க கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவன சி.ஈ.ஓ டிம் குக் இதனை அறிமுகம் செய்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios