Asianet News TamilAsianet News Tamil

iPhone SE Price: குறைந்த விலை 5ஜி ஐபோன் அறிமுகம் - ஆப்பிள் அதிரடி!

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் இந்திய விலை விவரங்களை பார்ப்போம். 

Apple introduces new iPhone SE with 5G support India price
Author
Tamil Nadu, First Published Mar 9, 2022, 5:15 AM IST

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் SE மாடலில் 4.7 இன்ச் ரெட்டினா HD ஸ்கிரீன், ஹேப்டிக் டச் மற்றும் டச் ஐ.டி. சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் புதிய ஐபோன் SE, ஐபோன் 12 மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட செராமிக் ஷீல்டு பாதுகாப்பு, கிளாஸ் மற்றும் அலுமினியம் டிசைன் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, ஸ்மார்ட் HDR4, 7MP செல்ஃபி கேமரா, 1080P HD வீடியோ ரெக்கார்டிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய ஐபோன் SE மாடலில் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

Apple introduces new iPhone SE with 5G support India price

புதிய ஐபோன்  SE அம்சங்கள்

- 4.7 இன்ச் 1334x750 பிக்சல் IPS 326 ppi டிஸ்ப்ளே
- 6-கோர் ஏ15 பயோனிக் சிப்செட் 
- 64GB, 128GB மற்றும் 256GB மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஓ.எஸ். 15
- டூயல் சிம் ஸ்லாட் 
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
- 12MP வைடு ஆங்கில் கேமரா, f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 4K வீடியோ ரெக்கார்டிங்
- 7MP செல்ஃபி கேமரா, f/2.2, 1080p வீடியோ ரெக்கார்டிங்
- டச் ஐ.டி. கைரேகை சென்சார்
- பில்ட்-இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் 
- 5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5.0
- பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி
- 15 மணி நேரத்திற்கான வீடியோ பிளேபேக் 

Apple introduces new iPhone SE with 5G support India price

புதிய ஐபோன் SE மாடல் மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் பிராடக்ட் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஐபோன் SE 64GB மாடல் விலை ரூ. 43,900 ஆகும். இது முந்தைய ஐபோன் SE மாடலை விட ரூ. 1400 அதிகம் ஆகும்.  புதிய ஐபோன் SE 128GB விலை ரூ. 48,900 என்றும் 256GB விலை ரூ. 58,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்தியா மட்டுமின்றி 30-க்கும் அதிக உலக நாடுகளில் புதிய ஐபோன் SE முன்பதிவு மார்ச் 11 ஆம் தேதியும், விற்பனை மார்ச் 18 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios