Asianet News TamilAsianet News Tamil

Alert : இந்த பிரபலமான 10 ஆண்ட்ராய்டு குளோன் செயலிகளை உடனே டெலிட் பண்ணுங்க.. இல்லையெனில் ஆபத்து..

தீங்கிழைக்கும் மால்வேர் கொண்ட ஆண்ட்ராய்டு செயலிகள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருந்தால் உடனடியாக அவற்றை டெலிட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Alert : Delete these 10 popular android fake apps immediately.. otherwise risk..
Author
First Published Jun 8, 2023, 11:46 PM IST

சைபர் கிரைமினல்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, இறுதியில் அவர்களின் வங்கிகளில் இருந்து பணத்தை திருட பல்வேறு நூதன முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது ஸ்மோர்ட்போனுக்கு மால்வேரை அனுப்புவதன் மூலம் பெரும்பாலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூட இந்த மால்வேரை கண்டறிய நீண்ட நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் முறையான செயலிகள் அல்லது சேவைகளாக அந்த மால்வேர் மாறுகிறது. இத்தகைய தீங்கிழைக்கும் செயல்களால், தீங்கிழைக்கும் மால்வேர்கள் தற்போது புதிய கவலைகளை எழுப்பியுள்ளன, இதனால் பல்லாயிரக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்சரிக்கையாக என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Whatsapp அறிமுகம் செய்துள்ள Channels என்ற புதிய அம்சம்! அது எப்படி வேலை செய்கிறது? முழு விவரம் இதோ..

Bitdefender என்ற நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு மறைக்கப்பட்ட மால்வேர் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இது 6 மாதங்களுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மொபைல் சாதனங்களில் கண்டறியப்படாமல் இருந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த தீங்கிழைக்கும் மால்வேர் தொடர்பான மேலதிக விசாரணையில், கணிசமான வருவாயை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டு, ஆன்ட்ராய்டு சாதனங்களில் adware தீவிரமாக விநியோகிப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. இதுவரை, Bitdefender இந்த adware கொண்ட 60,000 தனித்துவமான செயலிகளை அடையாளம் கண்டுள்ளது,

இது ஆண்ட்ராய்டு பயனர்களை எவ்வாறு பாதிக்கிறது?

இந்த adware, பல்வேறு வகையான தீம்பொருளை நோக்கி திருப்பிவிடும் ஒரு தந்திரத்தை செயல்படுத்தியுள்ளதாக மேலும் ஆராய்ச்சி பரிந்துரைத்தது. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து முக்கியமான நிதித் தகவல்களைத் திருடும் திறன் கொண்ட வங்கி ட்ரோஜான்களும் இதில் அடங்கும். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த தீம்பொருள் ஏற்றப்பட்ட செயலிகள், உண்மையில் Play Store இல் வெளியிடப்பட்ட உண்மையான மற்றும் பிரபலமான பயன்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன.

இந்த செயலிகள் "மாற்றியமைக்கப்பட்ட" பயன்பாடுகள் என்று குறிப்பிடப்படுகின்றன. அதாவது இந்த செயலிகள், உண்மையான செயலிகளின் அம்சங்களுடன் களின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகளாகும். எனவே இந்த தீங்கிழைக்கும் மால்வேர் கொண்ட செயலிகள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருந்தால் உடனடியாக அதை டெலிட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மால்வேரால் ஏமாற்றப்பட்ட தீங்கிழைக்கும் செயலிகளின் பட்டியல் இதோ :

  • Games with unlocked features
  • Free VPN
  • Fake videos
  • Netflix
  • Fake tutorials
  • YouTube without ads
  • TikTok without ads
  • Cracked utility programs: weather, pdf viewers, etc
  • Fake security programs

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் சாதனத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்த மால்வேர் அச்சுறுத்தல்களைத் திறம்படக் கண்டறியும்  robust security solution என்ற பாதுகாப்புத் தீர்வைப் பயன்படுத்துமாறு இணையப் பாதுகாப்பு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 
  • மேலும், மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்கள் மற்றும் இணையதளங்களில் இருந்து பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் சாதனத்தின் பாதுகாப்பை சமரசம் செய்யும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
  • முறையான ஆதாரங்களில் இருந்தும் பதிவிறக்குவதற்கு முன், பயன்பாட்டின் டெவலப்பரை தவறாமல் சரிபார்க்கவும்.

பெரிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வரும் ChatGPT நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன்!

Follow Us:
Download App:
  • android
  • ios