மீண்டும் மீண்டுமா? விலை உயர்வுக்கு தயாராகும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் மீண்டும் தனது சேவை கட்டணங்களை உயர்த்துவதில் தயக்கம் காட்டாது என தெரிவித்துள்ளது.

 

Airtel Says Tariff Hike Expected in 2022

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக பாரதி ஏர்டெல் மொபைல் கால் மற்றும் சேவைகளின் கட்டணத்தை இந்த ஆண்டு உயர்த்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஒரு வாடிக்கையாளரிடம் இருந்தும் கிடைக்கும் வருவாயை (ARPU) ரூ. 200 ஆக அதிகப்படுத்த ஏர்டெல் திட்டமிட்டு வருகிறது. 

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஏர்டெல் நிருவனம் தனது சேவை கட்டணங்களை  18 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் ARPU ரூ. 163 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.2 சதவீதம் குறைவு ஆகும். 

Airtel Says Tariff Hike Expected in 2022

"2022 ஆண்டில் விலை உயர்வை நான் எதிர்பார்க்கிறேன். எனினும், அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் இதற்கு வாய்ப்பில்லை. சிம் கன்சாலிடேஷன் மற்றும் வளர்ச்சி மீண்டு வர வேண்டும் என்ற நிலையில், மற்றொரு விலை உயர்வு நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இது போட்டியாளர்களின் நடவடிக்கைகள் சார்ந்த விஷயம் ஆகும். முன்பை போன்றே இந்த முறையும் முதலில் விலையை உயர்த்த தயக்கம் காட்ட மாட்டோம்," என பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்கனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்தார். 

"சந்தையில் ARPU கட்டணத்தில், எங்களின் ARPU விரைவில் ரூ. 200-ஐ கடக்கும் என நம்புகிறோம். இந்த ஆண்டிலேயே இது சாத்தியமாகும் என நினைக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் ARPU ரூ. 300 வரை செல்லலாம். இதன் மூலம் நிகர லாபத்தில் 15 சதவீதம் வரை அதிகரிக்கும்," என அவர் மேலும் தெரிவித்தார். 

பாரதி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் 31, 2021 வரை நிறைவுற்ற மூன்றாவது காலாண்டில் ரூ. 830 கோடி வருவாயுடன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 2.8 சதவீதம் வீழ்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. அதற்கு முந்தைய காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 854 கோடி வருவாய் ஈட்டி இருந்தது. காலாண்டு அடிப்படையில் 2020 டிசம்பர் வரை நிறைவுற்ற காலாண்டுடன் ஒப்பிடும் போது பாரதி ஏர்டெல் லாபம் கடந்த காலாண்டில் 12.6 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 29,867 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios