Asianet News TamilAsianet News Tamil

டுவிட்டரைப் போல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கும் விரைவில் கட்டணம்?

டுவிட்டரில் ப்ளூ சந்தா கட்டணம் விதிக்கப்பட்டது போல், இன்ஸ்டாகிராம் தளத்திலும் விரைவில் கட்டண சந்தா முறை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

After Twitter, Instagram could soon decide to charge users for the blue verification mark
Author
First Published Feb 3, 2023, 8:39 PM IST

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்தாண்டு டுவிட்டரை கைப்பற்றினார். அதன்பிறகு, பல்வேறு சீர்திருத்த மாற்றங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக இதற்கு முன்பு இலவசமாக இருந்த ப்ளூ சந்தாவுக்கு எலான் மஸ்க் கட்டணம் சந்தாவாக மாற்றினார். அதன்படி, ப்ளூ சந்தாவுக்கு மாதம் 8 டாலர் என்ற வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், டுவிட்டரைப் போலவே இன்ஸ்டாகிராமிலும் விரைவில் கட்டண சந்தா முறை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ட்விட்டருக்குப் பிறகு, இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றாகும். இன்ஸ்டாவில் உள்ள பிரபலங்கள், முக்கிய நபர்கள் தங்கள் கணக்கை அதிகாரப்பூர்வமா காட்டும் வகையில் நீல நிற குறியீடு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இப்படியான சூழலில் அலெஸாண்ட்ரோ பலுஸி என்ற ​​ரிவர்ஸ் இன்ஜினியர்  ஒருவர், இன்ஸ்டாகிராம் விரைவில் கட்டண முறை அறிமுகப்படுத்தும் என்று கூறி, கோடிங் குறியீடுகளையும் சுட்டிக்காட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  "IG_NME_PAID_BLUE_BADGE_IDV" மற்றும் "FB_NME_PAID_BLUE_BADGE_IDV" என்று எழுதப்பட்ட கோடிங் ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளன. 

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் இரண்டிலும் கட்டண முறையிலான அங்கீகாரம் செயல்பாட்டில் உள்ளது என்பதை இந்த கோடிங் தெளிவாகக் காட்டுகிறது. அவர் வெளியிட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டில், Source IDV என்பது "அடையாள அங்கீகாரம்" என்பதைக் குறிக்கிறது. இன்ஸ்டாகிராம் தரப்பில் இந்த கட்டண சந்தா முறையை எப்போது அறிவிக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. 

1 பில்லியன் கலர் டிஸ்ப்ளேவுடன் Oppo Reno 8T ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!!

டுவிட்டரில் இதே போல் அடையாள அங்கீகாரம் பெறுவதற்கான ப்ளூ சந்தா திட்டத்தில் சேர மாதத்திற்கு 8 டாலர் வசூலிக்கிறது. அதுவே, iOS பயனர்களாக இருந்தால் மாதத்திற்கு $11 செலுத்த வேண்டும். இந்த கட்டண முறை தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அமலுக்கு வந்துள்ளது. 

இன்ஸ்டாகிராமும் ப்ளூ டிக் குறியீடுக்கு கட்டணம் வசூலித்தால், அதற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது தெரியவில்லை. உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், இதுபோல் கட்டண சந்தாவை பெருநிறுவனங்கள் கொண்டு வந்த வண்ணம் உள்ளன. நெட்ஃபிளிக்ஸ் OTT நிறுவனமும், பயனர்கள் தங்கள் அக்கவுண்ட்டை ஷேர் செய்தால் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios