கூகுள் ஜெமினி மாணவர்களுக்கு வினாடி வினா, டீப் சர்ச், ஆடியோ கண்ணோட்டம், படப் பகுப்பாய்வு என 4 இலவச அம்சங்களை வழங்குகிறது. இவை தேர்வுக்குத் தயாராவதற்கும், சுயமாகப் புரிந்துகொள்வதற்கும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
இன்றைய டிஜிட்டல் காலத்தில் கூகுள் ஜெமினி ஆனது மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் என பலருக்கும் அத்தியாவசியமான AI தளமாக மாறியுள்ளது. படிப்பில் வரும் சிக்கல்களைத் தீர்ப்பதோடு, குறிப்புகள், வினாடி வினா, படங்கள், வீடியோக்கள் என பல்வேறு வடிவங்களில் உதவி செய்கிறது. குறிப்பாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, ஜெமினி வழங்கும் இலவச அம்சங்கள் மிகச் சிறந்த துணையாக உள்ளது.
கூகுள் ஜெமினியின் முக்கிய 4 இலவச அம்சங்கள்
வினாடி வினா & ஃபிளாஷ் கார்டுகள்
- தேர்வுகள் நெருங்கும்போது, நீங்கள் படித்ததை சோதிக்க இந்த வசதி உதவும்.
- குறிப்புகள் அல்லது PDF-ஐ பதிவேற்றினால், ஜெமினி அதை வினாடி வினா, ஃபிளாஷ் கார்டுகளாக மாற்றும்.
- முடித்த பிறகு -“எனது செயல்திறனை பகுப்பாய்வு செய்”- கிளிக் செய்து, உங்கள் பலவீனம், வலிமையைப் புரிந்து கொள்ளலாம்.
டீப் சர்ச்
- ஒரு தலைப்பை ஆழமாக அதாவது விரிவாக படிக்க விரும்பினால், ஜெமினியின் டீப் சர்ச் அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
- “Run a Deep Research about (Topic)”- என டைப் செய்தால், பல்வேறு வலைத்தளங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தொகுத்துக் கொடுக்கும்.
ஆடியோ கண்ணோட்டம்
- புத்தகங்களைப் படிக்க சோர்வாக இருந்தால், இந்த வசதி சிறந்தது.
- குறிப்புகள், ஆவணங்கள் அனைத்தையும் ஜெமினி ஆடியோவாக மாற்றி கேட்கும் வசதி வழங்குகிறது.
- ஒரு கேள்வியை கேட்டால், படிப்படியாக பதில் சொல்வதோடு, புரியவில்லை என்று மீண்டும் விரிவாகக் கேட்கலாம்.
படப் பகுப்பாய்வு
- புகைப்படம், வரைபடம், ஆவணம் எதுவாக இருந்தாலும், ஜெமினி அதை எளிதாக்கும்.
- புத்தகக் கேள்வி புகைப்படத்தைப் பதிவேற்றினால், சில வினாடிகளில் விளக்கம் தரும்.
-குறிப்பாக கணிதம், அறிவியல் வரைபடங்கள், வரலாற்று ஆவணங்கள் புரிந்துகொள்வதற்கு உகந்தது.
மொத்தத்தில், கூகுள் ஜெமினியின் இந்த 4 அம்சங்கள் மாணவர்களின் படிப்பு சுமையை குறைத்து, தேர்வுக்குத் தயாராவதற்கும், சுயமாகப் புரிந்துகொள்வதற்கும் சிறந்தது. வழிகாட்டியாக இருக்கும்.
