2022 Toyota Glanza : எக்கச்சக்க அப்டேட்களுடன் புது கிளான்சா மாடல் அறிமுகம் - விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 கிளான்சா மாடலை அறிமுகம் செய்தது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் புதிய தலைமுறை கிளான்சா ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டொயோட்டா கிளான்சா விலை ரூ. 6.39 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 2022 டொயோட்டா கிளான்சா மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கிறது.
புதிய கிளான்சா முந்தைய மாடலை விட அதிக மாற்றங்களை பெற்று இருப்பதோடு, ஏராளமான அம்சங்கள், மேம்பட்ட ஸ்டைலிங் மற்றும் முன்பை விட அதிக மைலேஜ் வழங்கும் என்ஜின் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கிளான்சா மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், புதிய கிளான்சா மாடலில் முற்றிலும் புது தோற்றம் பெற்று இருக்கிறது.
2022 டொயோட்டா கிளான்சா மாடலின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கன வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது. 2022 டொயோட்டா கிளான்சா மாடலில் அகலமான கிரில், நடுவே குரோம் அக்செண்ட் கொண்டிருக்கிறது. இதன் பம்ப்பர் ஆங்குலர் லுக் மற்றும் சி வடிவிலான குரோம் இன்செர்ட்கள் மற்றும் அகலமான ஏர் இண்டேக் பெற்று இருக்கிறது.
புதிய கிளான்சா மாடலில் ஸ்வெப்ட்-அப் ஹெட்லேம்ப்கள், புதிய எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், பொனெட்டில் மஸ்குலர் ஹான்ச்கள் உள்ளன. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. ப்ரோஃபைலில் புதிய கிளான்சா பார்க்க பலேனோ மாடலை போன்றே காட்சியளிக்கிறது. பின்புறம் சி வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன. இந்த மாடலில் 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
உள்புறம் பலேனோ மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே புதிய கிளான்சா மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் சற்றே பெரிய 9 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி மற்றும் 40-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் அலெக்சா அசிஸ்டன்ஸ், ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, ரியர் ஏ.சி. வெண்ட்கள் உள்ளன.
புதிய டொயோட்டா கிளான்சா மாடலில் 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள VVT மோட்டார் 88 பி.ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டியும், எக்ஸ்டெண்டட் வாரண்டி ஐந்து ஆண்டுகள் அல்லது 2 லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வழங்குகிறது. இத்துடன் வழக்கமான சர்வீஸ் சேவையை டொயோட்டா 60 நிமிடங்களில் வழங்குகிறது. இத்துடன் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய டொயோட்டா கிளான்சா மாடல் ஹூண்டாய் i20, டாடா அல்ட்ரோஸ், ஹோண்டா ஜாஸ் மற்றும் மாருதி சுசுகி பலேனோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.