Asianet News TamilAsianet News Tamil

ஹைப்ரிட் பவர்டிரெயின், 10 வேரியண்ட்கள்... அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா..!

புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் பத்து வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

2022 maruti suzuki brezza to sport hybrid powertrain might get 10 variants 
Author
India, First Published Jun 28, 2022, 5:13 PM IST

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மற்றும் 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் பத்து வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்: ரூ. 11 லட்சம் விலையில் புது டுகாட்டி பைக் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

மேலும் 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் தரவுகளின் படி 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் ஏழு மேனுவல் வேரியண்ட்கள் மற்றும் மூன்று ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. 

இதையும் படியுங்கள்: அழகாய் உருவாகும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்... அசத்தல் டீசர்கள் வெளியீடு..!

2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மேனுவல் வேரியண்ட்கள் LXI, LXI (O), VXI, VXI (O), ZXI, ZXI (O), மற்றும் ZXI+ வேரியண்ட்களிலும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் VXI, ZXI, மற்றும் ZXI+ வேரியண்ட்களில் கிடைக்கும். வேரியண்ட்கள் மட்டும் இன்றி 2022 பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாடல் பற்றிய இதர விவரங்களும் வெளியாகி உள்ளது. அதன் படி புதிய 2022  மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலிலும் K15C பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

2022 maruti suzuki brezza to sport hybrid powertrain might get 10 variants 

இதையும் படியுங்கள்: தொடர் சோதனையில் ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 - இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்கள்..!

இதே என்ஜின் மேம்பட்ட புதிய மாருதி சுசுகி எர்டிகா மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த என்ஜின் மைல்டு ஹைப்ரிட் 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட் ஆகும். இது மொத்தத்தில் 104.6 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இதன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மாருதி சுசுகி எர்டிகா மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அதே யூனிட் ஆக இருக்கும் என தெரிகிறது. 

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் 3995 மில்லிமீட்டர் நீளமும், 1790 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 1685 மில்லிமீட்டர் உயரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரின் வீல்பேஸ் 2500 மில்லிமீட்டர் ஆகும். இதன் ஆட்டோமேடிக் வேரியண்ட் எடை 1680 கிலோ, மேனுவல் வேரியண்ட் 1640 கிலோ எடை கொண்டு இருக்கிறது. இந்த மாடல் குருகிராம் மற்றும் மனேசாரில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios