இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் வசதி வந்தாச்சு! எப்படி யூஸ் பண்ணுறதுன்னு தெரியுமா?
விர்சுவல் மற்றும் நிஜ உலகங்களை இணைக்கும் வீடியோ கால் வசதி பல சமூக வலைத்தளங்களில் ஏற்கெனவே உள்ளது. இப்போது இன்ஸ்டாகிராமிலும் கிடைக்கிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதற்கான இன்ஸ்டாகிராம் அதிகமாக பயனர்களை ஈர்க்கும் சமூக வலைத்தளமாக உள்ளது. இதில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள தனித்துவமான அம்சங்களில் ஒன்று வீடியோ கால் வசதி.
விர்சுவல் மற்றும் நிஜ உலகங்களை இணைக்கும் இந்த வசதி பல சமூக வலைத்தளங்களில் ஏற்கெனவே உள்ளது. இப்போது இன்ஸ்டாகிராமிலும் கிடைக்கிறது. வீடியோ அழைப்புகளை பயன்படுத்துவதும் தொடங்குவதும் நிர்வகிப்பதும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரடியாக உரையாட இது ஒரு சிறந்த வாய்ப்பைத் தருகிறது.
வீடியோ கால் செய்வது எப்படி?
1. இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியைத் திறக்கவும். மேல் வலது மூலையில் உள்ள டைரக்ட் மெசேஜ் ஐகானை கிளிக் செய்து, அதில் வீடியோ காலில் தொடர்பு கொள்ள விரும்பும் நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. வீடியோ அழைப்பைத் தொடங்க இரண்டு வழிகள் உள்ளன. தேர்ந்தெடுத்த நபருடனான உரையாடலில் மேல் வலது மூலையில் உள்ள கேமரா ஐகானை கிளிக் செய்யலாம். அல்லது. உரையாடலுக்குள் சென்றபின் திரையில் வலதுபுறமாக ஸ்வைப் செய்யலாம்.
3. உடனே நீங்கள் இன்ஸ்டாகிராம் வீடியோ காலில் அழைப்பது அந்த நண்பருக்கு நோட்டிஃபிகேஷன் கிடைக்கும். அவர் வீடியோ காலை ஏற்று பதிலளிக்கவோ நிராகரிக்கவோ செய்யலாம்.
பூமியைப் போல இன்னொரு கிரகம் இருக்கு! வெறும் 137 ஒளியாண்டு தொலைவில் உள்ள 'சூப்பர் எர்த்'!
வீடியோ அழைப்பை நிர்வகித்தல்:
எதிர்முனையில் உள்ள நண்பர் அழைப்பை ஏற்றதும் அவரது வீடியோ காட்சியை நீங்கள் பார்க்கலாம்.
பேசிக்கொண்டிருக்கும்போதே செல்ஃபி கேமரா மற்றும் ரியர் கேமரா இடையே மாறிக்கொள்ளலாம். அதற்கு சுவிட்ச் கேமரா ஐகானை பயன்படுத்தலாம்.
மைக்ரோஃபோன் ஐகானை கிளிக் செய்து உங்கள் மைக்ரோஃபோனை மியூட் செய்யலாம்.
ஸ்மைலி ஐகானைத் தொட்டு வேடிக்கையான விஷுவல் எஃபெக்ட்களை வீடியோ காலில் சேர்க்கலாம்
இன்ஸ்டாகிராம் வீடியோ அழைப்பைத் துண்டிக்க, சிவப்பு தொலைபேசி ஐகானை கிளிக் செய்யலாம்.
சில குறிப்புகள்:
காலில் வீடியோவின் தரம் சிறப்பாக இருக்க, நல்ல வைஃபை அல்லது வேகமான மொபைல் டேட்டா இணைப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்ஸ்டா வீடியோ அழைப்பில் நான்கு பேர் வரை சேர்க்க அனுமதிகப்படுகிறது. உங்களைப் பின்தொடராதவர்களுடனுடம் வீடியோ காலில் பேசலாம். ஆனால், இருவரும் டைரக்ட் மெசேஜில் சாட் செய்திருக்க வேண்டும்.
விற்பனையில் தூள் கிளப்பும் டாடா பஞ்ச்... டஃப் கொடுக்கும் டாப் 5 கார்கள்...