Asianet News TamilAsianet News Tamil

பூமியைப் போல இன்னொரு கிரகம் இருக்கு! வெறும் 137 ஒளியாண்டு தொலைவில் உள்ள 'சூப்பர் எர்த்'!

பூமியைப் போல உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழல் கொண்ட சூப்பர் எர்த் என்ற கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. இது பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

NASA Discovers "Super-Earth", A Potentially Habitable Planet, Located 137 Light-Years Away sgb
Author
First Published Feb 5, 2024, 10:26 AM IST

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சூப்பர் எர்த் என்ற புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்தக் கோள் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டதாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 'சூப்பர்-எர்த்' ஒரு சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் அதற்கு அருகிலேயே பூமி அளவிலான மற்றொரு கிரகம் கூட இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வானியல் அளவுகோலின்படி, ஒரளவுக்கு பூமிக்கு அருகிலேயே உள்ளது என்று சொல்லலாம் எனவும் நாசா கூறியுள்ளது.

இந்த கிரகம் TOI-715 b என்று அழைக்கப்படுகிறது. பூமியை விட ஒன்றரை மடங்கு அகலமாக உள்ளது. அதன் தாய் நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கிரகம் நீரைக் கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. நாசாவின் கூற்றுப்படி, அதன் மேற்பரப்பில் திரவ இது தனது ஒரு சுற்றுப்பாதையை ஒரு முறை முழுமையாக சுற்றிவர வெறும் 19 நாட்களே ஆகிறது. அதாவது இந்த கிரகத்தில் ஓர் ஆண்டு என்பது 19 நாள்தான்!

AI தொழில்நுட்பம் வருமான வரி தாக்கலை சரிபார்க்க உதவுகிறது: மத்திய நேரடி வரி வாரிய தலைவர் தகவல்

"மேற்பரப்பில் நீர் இருக்க வேண்டுமானால், அதற்குப் பொருத்தமான வேறு பல வளிமண்டல பல காரணிகளும் இருக்க வேண்டும். இதுவரை செய்யப்பட்ட தோராய அளவீடுகள் மூலம், இந்தச் சிறிய கிரகம் பூமியைவிட சற்று பெரியதாக இருக்கலாம்" என்று நாசா கூறுகிறது.

இந்த கிரகம் சுற்றிவரும் சிவப்பு நட்சத்திரம் சூரியனை விட சிறியது மற்றும் குளிர்ச்சியானது. இதே போலவே, பல நட்சத்திரங்கள் சிறிய, பாறை உலகங்களை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது என்றும் நாதா தெரிவிக்கிறது.

"இந்த கிரகங்கள் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களை விட மிக நெருக்கமான சுற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளன. ஆனால் அவை சுற்றிவரும் நட்சத்திரம் சிறியதாகவும் குளிர்ச்சியானவையாகவும் இருப்பதால், கிரகங்கள் நெருக்கமாக கூடியுள்ளன. இருந்தாலும் அவை உயிரினங்கள் வாழ பாதுகாப்பாக இருக்கும்" என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சிலியில் பொழிந்த சாம்பல் மழை... காட்டுத் தீயில் 99 பேர் பலி... அவசரநிலை பிரகடனம் செய்த அதிபர் போரிக்

Follow Us:
Download App:
  • android
  • ios