Asianet News TamilAsianet News Tamil

சொமேட்டோவில் டெலிவரி பாயாக இருந்து கொண்டே டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற விக்கேஷ்; குவியும் வாழ்த்து!!

ஒரு நபரின் கனவு நனவாக வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் கனவை அடைய முடியும்.

Zomato Delivery Boy Vignesh Clears Tamil Nadu Public Service Commission Exam
Author
First Published Jul 24, 2023, 5:37 PM IST

அப்படி உழைத்துக் கொண்டே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வெற்றி பெற்று இருப்பவர் விக்னேஷ். இவர் சொமேட்டோ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இரவும், பகலும் படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

இவர் வெற்றியை கொண்டாடும் விதமாக சொமேட்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் இவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடியுள்ளது. தனது பதிவில், ''சொமேட்டோவில் டெலிவரி கூட்டாளியாக வேலை  செய்து கொண்டே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அனைவரும் ஒரு லைக் போடுங்கள்'' என்று பதிவிட்டுள்ளது. படத்தில் விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சொமேட்டோ டுவிட்டரில் பதிவு செய்ததில் இருந்து இதுவரை 1.4k லைக்குகளை விக்னேஷ் குவித்துள்ளார். 59 பேர் ரீடுவீட் செய்துள்ளனர். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

''So, now Vignesh would sign 'orders' :), Tremendous achievement, Great'' என்று பதிவிட்டுள்ளனர். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு என்பது தமிழக அரசாங்கத்தின் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். பல்வேறு பிரிவுகளாக இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios