மஞ்சள் வீரனை சூழ்ந்த சோதனை.. தொடர்ந்து நிராகரிக்கப்படும் ஜாமீன் மனு.. TTF வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
தனது YouTube சேனலில் வெளியிடும் வீடியோக்கள் மூலமாக பலர் பிரபலமடைந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் நீண்ட நெடும் தூரம் பைக் ரைட் செய்வதை வீடியோவாக வெளியிட்டு, இன்று பல லட்சம் பாலோவர்களை கொண்டுள்ள ஒருவர் தான் டிடிஎஃப் வாசன்.

விலை உயர்ந்த பைக்குகளை கொண்டு அதில் நீண்ட நெடும் தூரம் பயணம் செல்வது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். அந்த வகையில் வாசன் அவர்களும் தனது நண்பர்களுடன் இணைந்து வெகு தூரம் பைக்கில் செல்லும் வீடியோக்களை தனது YouTube பக்கத்தில் வெளியிட்டு அதன் மூலம் பல லட்சம் ரசிகர்களை தற்போது ஈர்த்துள்ளார் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வட இந்தியாவில் பைக் ரைட் மேற்கொண்டிருந்த டிடிஎஃப் வாசன், அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கில் சென்று அதை வீடியோவாக எடுத்து பதிவிட்டு இருந்தார், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடைபெற்றது.
உறவினருடன் சண்டையிட்டு வெளியேறிய இளம்பெண்; நம்பவைத்து ஆசையை தீர்த்துக்கொண்ட காமுகன்கள்
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், தனது புதிய பைக் பயணத்தை துவங்குவதற்காக சென்ற பொழுது காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் ஊராட்சி அருகே வாசன் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தூக்கி வீசப்பட்டது. இதில் வாசனும் சாலையோரமாக தூக்கி வீசப்பட்டார், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனை தொடர்ந்து சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சாகசம் புரிந்த டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலுசெட்டி சத்திரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இதனை அடுத்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டு, இன்று அக்டோபர் மூன்றாம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜரான அந்த தினமே ஜாமீன் மனு கோரி டிடிஎப் சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில் அது நிராகரிப்பது. தொடர்ச்சியாக 3 முறை அவர் சார்பாக ஜாமீன் மனு அளிக்கப்படும் அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றோடு அவருடைய நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில், அவர் மீண்டும் பதிவு செய்த ஜாமீன் மனுவானது தற்பொழுது நிராகரிக்கப்பட்டு அவருடைய நீதிமன்ற காவல் அக்டோபர் மாதம் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.