சேலம் மாவட்டம், ஏற்காடு, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிலிப்குமார். இவரது மகன் கண்ணன் (27). ஏற்காட்டில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

சேலம் மாவட்டம், ஏற்காடு, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிலிப்குமார். இவரது மகன் கண்ணன் (27). ஏற்காட்டில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று மாலை கண்ணன், ஏற்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். பின்னர், ஏற்காடு பஸ் நிலையம் பின்புறம் சென்ற அவர், செல்போன் மூலம் தனது அக்காவிடம் பேசினார். அப்போது, போதை அதிகளவில் இருந்ததால், நிலைதடுமாறி அவர், அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதைனை செய்த டாக்டர், கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.