பறக்கும் ரயிலில் தொங்கியப்படி பயணிக்கும் இளைஞர்கள்.. வீடியோ வைரல்

சென்னையில் பறக்கும் ரயிலில் ஆபத்தான முறையில் வெளியே தொங்கிக் கொண்டு, இளைஞர்கள் சிலர் பயணிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Youngsters travel dangerously by hanging on the flying train - Viral video

சென்னையில் பறக்கும் ரயிலில் ஆபத்தான முறையில் வெளியே தொங்கிக் கொண்டு, இளைஞர்கள் சிலர் பயணிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயிலில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் இளைஞர்கள் சிலர் இரயிலின் பெயர்பலகை பிடித்து கொண்டு தொங்கியவாறு பயணம் மேற்கொள்கின்றனர்.

சிந்தாதரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி செல்லுக்கூடிய வழித்தடத்தில், இளைஞர்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். வீடியோவில்,” ஒரு இளைஞன், தனது கால்களை ரயிலின் மேல்புறத்தில் வைத்துக்கொண்டு, பெயர்பலகை  பிடித்து, தலைக்கீழாக தொங்கியப்படி பயணிக்கிறார்”.

மேலும் படிக்க:லிவிங் டுகெதர், திருமணமாகாத பெண்களுக்கும் கருகலைப்பு செய்ய உரிமை உண்டு.. உச்சநீதி மன்றம் அதிரடி.

அந்த வீடியோவிற்கு பின்னால் ”நாங்கள் இரும்பு கதவுகளை உடைப்போம்; சன்னல் கம்பிகளை வளைப்போம்” என்ற கானாப் பாடல் ஒன்று ஓடுகிறது.  தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் பேருந்து மற்றும் ரயில்களில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது வழக்கமாகி உள்ளது.

இதனை தடுக்கும் வகையில் அரசு சார்பில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது வீடியோ வைரலானதையடுத்து, இளைஞர்களை அடையாளம் காணும் செயலில் இரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

பறக்கும் ரயில் சேவை முழுவதும் பாலத்தின் மேல் சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், இளைஞர்கள் இதுபோன்று ரயில் வெளியே தொங்கிக்கொண்டு அட்டகாசம் செய்வது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:rahul gandhi yatra:ராகுல் காந்தியைச் சந்தித்ததும் மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு கதறிய சிறுமி: வைரல் வீடியோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios