லிவிங் டுகெதர், திருமணமாகாத பெண்களுக்கும் கருகலைப்பு செய்ய உரிமை உண்டு.. உச்சநீதி மன்றம் அதிரடி.
அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த விஷயத்தில் திருமணமான பெண்களிடம் இருந்து திருமணமாகாத பெண்களை வேறுபடுத்திப் பார்ப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். திருமண நிலையை என்பது ஒரு பெண்ணின் கருக்கலைப்பு உரிமையை பறிக்க காரணமாக இருக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
டெல்லியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் தனது ஆண் நண்பரால் தான் கர்ப்பம் ஆனதாகவும், ஆனால் அந்த ஆண் நண்பர் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும், எனவே தனது கர்ப்பத்தை கலைக்க தான் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார், ஆனால் தனது கர்ப்பத்தை கலைக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர் என அந்தப் பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அங்கு அவரது கோரிக்கைக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. அதன்பின்னர் அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட பெண் மனமுவந்து ஆண் நண்பருடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் ஆண் நண்பர் திருமணம் செய்து கொள்ள மறுப்பதால் அவர் கருவை கலைக்க அனுமதி கோரியுள்ளார். இந்த சூழ்நிலையில் அந்த பெண் குழந்தை பெற்றுக் கொண்டால் அது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும், எனவே அந்த பெண் திருமணம் ஆகாதவர் என்ற ஒரே காரணத்தால் அவரது கருக்கலைப்பு உரிமையை நாம் மறுக்க முடியாது,
தற்போது வரை அந்த பெண்ணுக்கு24 வாரம் அளவில் கரு வளர்ச்சி அடைந்துள்ளது, இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்து கரு கலைக்கும் பட்சத்தில் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்ற உறுதியாக கூறினால், கருவை கலைக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒருவேளை அதற்கு சாத்தியமில்லை என்றால், அந்தப் பெண் குழந்தையை பெற்றுக் கொடுத்து விட்டு போகலாம், அந்த குழந்தை காப்பகத்தில் வளரும், தேவைப்பட்டவர்கள் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என நீதிபதி கருத்து கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள்: திமுகவின் பல்டிகளும் துதிப் பாடல்களும் என்னென்ன.? லிஸ்ட் போட்டு 'முரசொலி'யை ரவுண்டு கட்டிய பாஜக.!
மேலும் இந்த வழக்கில், திருமண பெண்களைப் போல, அவர்களுக்கு தேவையில்லாத கர்பத்தை 24 வாரத்திற்குள் கலைக்க வழி வகை செய்யும் சட்டப் பிரிவு திருமணமாகாத பெண்களுக்கும் நீட்டித்து வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக நீதிபதி ஏஒய் சந்திராசூட் தெரிவித்தனர். பின்னர் அதில் நிபுணர்களின் கருத்து தேவைப்படுவதாக அப்போது கூறியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் நீதிபதி ஏ.ய் சந்திரசூட், நீதிபதி ஜேபி பர்தி வாலா, நீதிபதி ஏ. எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அனைத்து பெண்களும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உள்ளது. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்ற காரணத்தைக் கூறி அந்த பெண்ணின் கருக்கலைப்பு உரிமையை பறிக்க முடியாது, திருமணம் ஆகாத பெண்கள் கூட 24 வாரங்களுக்குள் தேவையற்ற கர்ப்பத்தை கலைக்க உரிமை பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்: PMGKAY: இலவச உணவுதானியம் வழங்கும் PMGKAY திட்டம் டிசம்பர் வரை நீட்டிப்பு: ரூ.45 ஆயிரம் கோடி செலவு
திருமணம் ஆகாத பெண்கள் தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை பறிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல், கரு கலைக்கும் விவகாரத்தில் திருமணமான மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு இடையேயான வேறுபாடு பார்க்கக்கூடாது. இது திருமணமான பெண்கள் மட்டுமே பாலியல் ரீதியான உறவில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுவதற்கு சமம், அதேபோல் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.